ரயிலில் ரீல்ஸ் பார்க்கிறார்களா? எங்கே புகார் செய்ய வேண்டும்?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ரயிலில் ரீல்ஸ் பார்க்கிறார்களா? எங்கே புகார் செய்ய வேண்டும்?

ரயில்களில் பயணிக்கும்போதோ அல்லது ரயில் நிலையத்திலேயோ இடையூறு ஏற்பட்டால் புகார் அளிக்கும் வசதி பற்றி... ரயில்களில் பயணிக்கும்போது புகார் அளிக்கும் வசதி... - கோப்புப் படம் ரயில்களில் பயணிக்கும்போதோ அல்லது ரயில் நிலையத்திலேயோ பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டால் எங்கே புகார் அளிக்க வேண்டும்? ரயில்களில் பயணிக்கும்போது பயணிகள் எவ்வித இடையூறும் இன்றி பயணிக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஏற்கெனவே அமலில் இருக்கின்றன. குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் அதிக சத்தத்துடன் செல்போனில் பேசுவதோ, பாட்டு கேட்பதோ, ரீல்ஸ் பார்ப்பதோ கூடாது. போனில் பேசுவதாக இருந்தால்கூட மற்ற பயணிகளுக்கு தொந்தரவு இன்றி மெதுவாக பேச வேண்டும். ஆடியோ கேட்கும்போது, விடியோக்களை பார்க்கும்போதும் இயர்போன்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல இரவு 10 மணிக்கு இரவு விளக்கு (லைட்) தவிர மற்ற அனைத்து லைட்களையும் அணைத்துவிட வேண்டும். ஸ்லீப்பர் இருக்கைகள் என்றால் 10 மணிக்கு மேல் மற்றவர்கள் தூங்குவதற்கு இருக்கைகளை கொடுத்துவிட வேண்டும். எந்தவிதத்திலும் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறினால் ரயில்வே சட்டம் 1989 -ன்படி முதற்கட்டமாக ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. ரயில்வே அதிகாரியின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டால் ரூ. 5,000 வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். மேலும் அவர்கள் ரயிலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். ரயிலில் பயணம் செய்யும்போது பாதுகாப்பு, மருத்துவம் தொடர்பான மற்றும் பொதுவான புகார்களுக்கு 139 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். ரயில்வே பாதுகாப்புப் படை தொடர்பான புகார்களுக்கு 182 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசலாம். அனைத்திந்திய ரயில்வே பாதுகாப்பு மற்றும் அவசர உதவி எண் 1512 என்ற எண்ணையும் தொடர்புகொள்ளலாம். இதுதவிர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான புகார்களுக்கு 1098 என்ற உதவி எண்ணும் பயன்பாட்டில் உள்ளது. இதுதவிர புகார்களுக்கு என்றே 'ரயில் மதாத்' என்ற இணையதளமும் செயலியும் உள்ளது. டிஜிட்டல் முறையில் 24/7 மணி நேரமும் புகார்கள் அளிக்க இந்த வசதி உள்ளது. இதன்மூலம் செல்போனில் ஆன்லைன் மூலமாகவே புகார் அளிக்க முடியும். இந்திய ரயில்வே -யின் அதிகாரபூர்வ 'ரயில் ஒன்' செயலியிலும் இந்த வசதி உள்ளது. இதன்படி பயணிகள், ரயில் நிலையத்திலோ அல்லது பயணத்தின்போதோ உங்களுடைய அனைத்துவிதமான புகார்களையும் பதிவு செய்யலாம். ரயிலில் கழிவறை சுத்தமில்லை என்றாலோ, இரவு 10 மணிக்கு மேல் சக பயணி செல்போன் பார்த்துக்கொண்டு தொந்தரவு செய்தாலோ, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, அவசர மருத்துவ வசதி, உணவு தரம் குறைவு, டிக்கெட் பரிசோதகர் முறையாக நடந்துகொள்ளாதது என அனைத்திற்கும் புகார் அளிக்கலாம். புகார் வழிமுறை.. ரயில் ஒன் செயலியில் முகப்பு பக்கத்தில் 'Rail Madad' என்ற ஒரு ஆப்ஷன் உள்ளது. அதை கிளிக் செய்து உள்ளே சென்றால், மேலே உங்களுடைய இருப்பிடத்தைத் (Location) தேர்வு செய்துகொள்ளலாம். உங்கள் புகாரை ஆடியோ, விடியோ, புகைப்படம் என எந்த வடிவில் பதிவு செய்கிறீர்கள் என்பதை தேர்வு செய்து அதனை உள்ளிட வேண்டும். அடுத்து ரயில் பயணத்திலா, ரயில் நிலையத்திலா என்பதைத் தேர்வு செய்து உங்களுடைய பிரச்னை குறித்த விவரங்களையும் பதிவிட வேண்டும். விரிவான தகவல்களையும் குறுஞ்செய்தியாக பதிவிடும் வசதியும் அதில் இருக்கிறது. அனைத்து தகவல்களையும் உள்ளிட்டு 'submit' செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு ஒரு புகாரளித்த எண் ஒன்று கிடைக்கும். அதைவைத்து புகாரின் நடவடிக்கை குறித்து தெரிந்துகொள்ளவும் முடியும். அடுத்த சில நிமிடங்களில் உங்களுடைய புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வார்கள். 10 நிமிடங்களுக்குள் புகார்களுக்கு நடவடிக்கையோ அல்லது பதிலோ அளிக்கப்படுகிறது. சமீபத்தில்கூட பிகாரில் பயணி ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு டயப்பர் தீர்ந்துவிட்டது என்று கேட்க, 10 நிமிடத்தில் பதில் வந்ததுடன், அடுத்த ரயில் நிலையத்தில் ரயில் உணவு நிலைய மேலாளர் மூலமாக டயப்பர் வழங்கப்பட்டது. சக பயணிகள் தொந்தரவு செய்வதாக வந்த புகார்களுக்கும் ரயில்வே அதிகாரிகள் / ரயில்வே போலீஸ் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள். செயலி இல்லை என்றால் 'ரயில் மதாத்' இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். அதனால் ரயிலில் பயணிக்கும்போது இரவு 10 மணிக்கு மேல் செல்போனில் விடியோ / ரீல்ஸ் பார்ப்பது என்று தொந்தரவு இருந்தால் புகார் அளிக்கத் தயங்க வேண்டாம். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை