பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை அக்ஷிதாவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என அதிகரிக்கும் கோரிக்கை குறித்து... டிடிஎஃப் வாசனை பாத்திரத்தால் தாக்கும்போது / அக்ஷிதா - எக்ஸ் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகை அக்ஷிதாவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என பிக் பாஸ் விடியோவில் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 8வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் குயிக் கன் கெளவ்பாய்ஸ், மைனிங் மாஃபியாஸ் என்ற போட்டியை புதிதாக அறிமுகம் செய்துள்ளார் பிக் பாஸ். இதுவரை எந்தவொரு சீசனிலும் இந்த போட்டி வைக்கப்படவில்லை. பிக் பாஸ் சீசன் 10-ல் முதல்முறையாக கொண்டுவரப்பட்டுள்ளது இப்போட்டியில் குயிக் கன் கெளவ்பாய்ஸ் அணியைச் சேர்ந்த டிடிஎஃப் வாசனை, மைனிங் மாஃபியாஸ் அணியின் அக்ஷிதா கடுமையாகத் தாக்குவதைப்போன்ற விடியோ வெளியாகியுள்ளது. மைனிங் மாஃபியாஸ் அணியினர் உணவைத் திருட வந்தபோது, க்யிக் கன் கெளவ்பாய்ஸ் அணியினர் அதனைத் தடுக்க முயன்றனர். அப்போது ஆக்ரோஷமாக செயல்பட்ட அக்ஷிதா, கையில் இருந்த குக்கருடன் டிடிஎஃப் வாசனை தடுக்க முயன்றார். ஆனால், குக்கரால் தாக்க முயன்றதாக டிடிஎஃப் வாசன் கூறுகிறார். இது தொடர்பாக பிக் பாஸ் வெளியிட்ட விடியோவிலும் குக்கருடன் தாக்குவதைப்போன்றே இடம்பெற்றுள்ளதால், அக்ஷிதாவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என பிக் பாஸ் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே பிக் பாஸ் வீட்டில் உள்ள முகேஷ் உள்ளிட்ட போட்டியாளர்களிடம் வாசனுடன் நடந்தது என்ன? என்பது குறித்து அக்ஷிதா விவரித்து வருகிறார். அதில், தான் வாசனை தாக்கவில்லை என்பதையே பதிவு செய்து வருகிறார். வார இறுதி நாள்களில் விஜய் சேதுபதி இது குறித்து கடுமையாக எச்சரிப்பார் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த வார இறுதி நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ரெட் கார்டு கொடுக்கப்படுமா? டிடிஎஃப் வாசனை தாக்கவில்லை என நியாயப்படுத்தும் அக்ஷிதா!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗