ரியான், வியான் முல்டர் சதத்தால் மீண்டது தென்னாப்பிரிக்கா: ஆஸி. வெற்றிக்கு 288 ரன்கள் இலக்கு!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ரியான், வியான் முல்டர் சதத்தால் மீண்டது தென்னாப்பிரிக்கா: ஆஸி. வெற்றிக்கு 288 ரன்கள் இலக்கு!

ரியான், வியான் முல்டர் சதத்தால் மீண்டது தென்னாப்பிரிக்கா... ரியான் ரிக்கெல்டான் - வியான் முல்டர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் ரியான் ரிக்கெல்டான், வியான் முல்டர் சதத்தால் 288 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலிய அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இவ்விரு அணிகளும் மோதும் மூன்றாவது போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸி. பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 429 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோஷ் இங்லீஷ் சதம் அடித்து 102 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து, 4-ஆவது நாள் ஆட்டம் தொடங்கியதும் 100 ரன்கள் முன்னிலையுடன் ஆடிய தென்னாப்பிரிக்க அணி தொடக்க விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், 6 ஆவது விக்கெட்டுக்கு கைகோர்த்த ரியான் ரிக்கெல்டான் - வியான் முல்டர் இருவரும் சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் சேர்ந்து 6-ஆவது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்த நிலையில், ரியான் ரிக்கெல்டான் 101 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து சதம் விளாசிய வியான் முல்டர் 115 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க அணி 134.4 ஓவர்களில் 387 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகினர். மார்க்வெஸ் ஆக்கர்மென் 62 ரன்களும், மேத்யூ ப்ரீட்ஸ்கி 43 ரன்களும் எடுத்தனர். மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தென்னாப்பிரிக்க அணி, 287 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 288 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4-ஆவது நாள் ஆட்டம் இன்று நிறைவடைந்த நிலையில், நாளை 90 ஓவர்கள் ஆட்டம் நடைபெறும். தொடரை வெல்வதற்கு ஆஸ்திரேலிய அணிக்கு 288 ரன்களும், தென்னாப்பிரிக்க அணிக்கு 10 விக்கெட்டுகளும் தேவையாக உள்ளன. குறைவான ரன் இலக்கு என்பதால் ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கியிருக்கிறது. Rickelton made 101 and Mulder 115 in a South African second innings total of 387. The innings ended in the last over of the fourth day, setting Australia to make 288 runs to win on the final day. The series between the two leading Test nations is tied at 1-1. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை