ராஜஸ்தானில் மருந்தக ஊழியருக்கு வந்த குறுஞ்செய்தி பற்றி.... பணம். - கோப்புப்படம். ராஜஸ்தானில் மருந்தக ஊழியரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1 லட்சம் கோடி முடக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் உள்ள மருந்தகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு, அவரது வங்கிக் கணக்கில் ரூ. 1 லட்சம் கோடி முடக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார் என்று காவல் துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர். இதுதொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்ட தவறு என்றும், உண்மையில் அத்தகைய தொகை எதுவும் அவரது கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றும் அவர்கள் விளக்கமளித்தனர். சிகார் சைபர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் தீன்தயாள் கூறுகையில், கோட்வாலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சமீர் கான், பேருந்து நிலையம் அருகே உள்ள மருந்தகத்தில் பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை தனது கைப்பேசிக்கு ரீசார்ஜ் செய்தபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1 லட்சம் கோடி முடக்கப்பட்டதாக அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அவரது கணக்கில் ஏற்கெனவே இருந்த ரூ. 55,000 தொகையும் முடக்கப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், மருந்தக உரிமையாளர் தீரஜ் மடோலியாவிடம் தெரிவித்தார். இருவரும் இணைந்து சைபர் காவல் நிலையத்தை அணுகினர். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், அந்த குறுஞ்செய்தி தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து கான் தனது வங்கியைத் தொடர்புகொண்டபோது, அவர்களும் இந்தத் தவறை உறுதிப்படுத்தினர். இதையடுத்து, அவரது கணக்கில் முடக்கப்பட்டிருந்த ரூ. 55,000 மீதான தடை நீக்கப்பட்டது என்று உதவி ஆய்வாளர் தெரிவித்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ. 1 லட்சம் கோடி முடக்கம்! வங்கி குறுஞ்செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருந்தக ஊழியர்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗