கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் ரூ. 200-க்கு 10 வகையான சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனை. மளிகைப் பொருள்கள் - கோப்புப்படம் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் ரூ. 200-க்கு10 வகையான சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனை செய்யப்படவுள்ளது. இதனை கூட்டுறவுத் துறை அமைச்சர் வ. காந்திராஜ் நாளை (அக். 30) தொடக்கி வைக்கிறார். இது தொடர்பாக கூட்டுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நுகர்வோருக்கு அன்றாடத் தேவையான அத்தியாவசிய மளிகைப் பொருள்களை நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய ஒருங்கிணைந்த “சிறப்பு மளிகைத் தொகுப்பு”, ஒரு தொகுப்பு ரூ. 200 என்ற விலையில், மாநகராட்சிகள் அல்லாத பகுதிகளில் செயல்படும் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், தொடக்கக் கூட்டுறவுப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் 128 விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோருக்கு விற்பனை செய்ய கூட்டுறவுத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை நாளை, 293, ஜி.என்.டி. ரோடு, செங்குன்றம், சென்னை – 600 052 என்ற முகவரியில் அமைந்துள்ள சைதாப்பேட்டை கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மருதம் கூட்டுறவு சிறப்பங்காடி (சுய சேவை பிரிவு) விற்பனை நிலையத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் வ. காந்திராஜ் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளார். 10 மளிகை பொருள்கள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பையில் ஒருங்கிணைந்த தொகுப்பாக மட்டுமே விற்பனை செய்யப்படும்; பொருட்கள் தனித்தனியாக விற்பனை செய்யப்படமாட்டாது. ஒவ்வொரு தொகுப்பின் மீதும் பொருள்களின் விவரம், அளவு மற்றும் “விற்பனை விலை ரூ. 200/- மட்டும்” என்ற முத்திரை (seal) இடப்பட்டிருக்கும். தரமான பொருள்கள் சரியான எடையில் நுகர்வோரைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், வெளிச்சந்தையின் விலையை விட குறைவான விலையில் வழங்கிடவும், கூட்டுறவுத் துறை அலுவலர்களால் விற்பனை தொடர்ந்து கண்காணிக்கப்படும். நுகர்வோர் தங்கள் அருகிலுள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இத்தொகுப்பினைப் பெற்றுப் பயனடையுமாறு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ. 200-க்கு 10 வகையான மளிகை தொகுப்பு! முழு விவரம்!
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗