ரூ. 5,000 கோடி மோசடி செய்ததாக தொழிலதிபர் பிரேம்குமாரை கேரள காவல்துறை கைது செய்தது குறித்து... பிஎல்எம் நிறுவனர் பிரேம்குமார் கைது சென்னையில் ரூ. 5,000 கோடி நிதி மோசடி வழக்கில் பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹௌசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டியின் நிறுவனத் தலைவரை கேரள காவல்துறை கைது செய்தனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர், பிரேம்குமார். இவர் முதியோர், ஓய்வூதியர்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி, 2006-ல் பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் (பிஎல்எம்) ஹௌசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி என்ற நிறுவனத்தை சென்னையில் நிறுவினார். இந்த நிறுவனத்தின் மூலம் பல கோடி ரூபாயும் திரட்டினர். இருப்பினும், முதிர்வுக் காலம் முடிவடைந்த பின்னரும் மக்களுக்கு உரிய பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றுவதாக பிஎல்எம் நிறுவனத்தின் மீது புகார்கள் வந்தன. இதனிடையே, மக்களின் கோடிக்கணக்கான பணத்தை கூட்டுறவு சங்க விதிகளுக்குப் புறம்பாக, தன்னுடைய சொந்த வங்கிக் கணக்குகளிலும் குடும்பத்தினர் பெயர்களிலும் மற்றும் பிற தனியார் தொழில் நிறுவனங்களிலும் முறைகேடாக பயன்படுத்தியதாக பிரேம்குமார் மீது புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டின. இந்த நிதி மோசடி வழக்கு தொடர்பாக, சென்னையில் பிரேம்குமாரை கேரள மாநில குற்றப்பிரிவு காவல்துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இருப்பினும், அதிகாரிகள் கைது செய்யப்படும் நேரத்தில் பிரேம்குமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், தற்போது நுங்கம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் பிரேம்குமாரை கேரளம் அழைத்துச் செல்ல காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் இயக்குநராகவும் இருக்கும் பிரேம் குமார், சமீபத்தில் மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜய்யை சந்தித்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
📢 விளம்பரம் • Advertisement
விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗