ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் அன்பில் மகேஸ் ஆஜரானது குறித்து... நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர் - DNS ரூ. 400 கோடி ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் ஆஜரானார். திமுக ஆட்சிக் காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ. 100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேஸை கடந்த அக். 26 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். இதனிடையே, அன்பில் மகேஸை 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணைக்காக, புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்படுத்தப்பட்டார். சிறையில் அன்பில் மகேஸுக்கு சிறப்பு உணவு வழங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறையில் முதல் வகுப்பும் முறையான உணவும் தரப்படவில்லை என நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் தரப்பில் புகார் தெரிவித்தனர். மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சப்பாத்தி மட்டுமே சிறையில் உணவாக வழங்குவதால் அன்பில் மகேஸின் உடல் எடை குறைந்து விட்டதாகவும், அவரின் வீட்டில் தயாரிக்கப்படும் உணவை வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அன்பில் மகேஸ் தரப்பில் தெரிவித்தனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
📢 விளம்பரம் • Advertisement
விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗