ரூ.11.15 கோடி போலி ஜிஎஸ்டி ரசீது மோசடி: கோவை தொழிலதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ரூ.11.15 கோடி போலி ஜிஎஸ்டி ரசீது மோசடி: கோவை தொழிலதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

உண்மையான சரக்கு பரிமாற்றங்கள் ஏதுமின்றி போலி ரசீதுகள் மூலமாக சுமாா் ரூ.11.15 கோடி மதிப்பிலான உள்ளீட்டு வரி வரவு மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபருக்கு 5 ஆண்டுகள் மெய்க்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சிறை - பிரதிப் படம் உண்மையான சரக்கு பரிமாற்றங்கள் ஏதுமின்றி போலி ரசீதுகள் மூலமாக சுமாா் ரூ.11.15 கோடி மதிப்பிலான உள்ளீட்டு வரி வரவு மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபருக்கு 5 ஆண்டுகள் மெய்க்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. கோவை ஜிஎஸ்டி ஆணையரகத்தின் தலைமையக தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அண்மையில் ஆய்வு நடத்தினா். இந்த ஆய்வில், ‘ஆலியா குரூப்’ என்ற குழுமத்தின் கீழ் செயல்பட்ட முகமது களஞ்சியம் முகமது ஆரிஃபின் மெசா்ஸ் ஆலியா என்டா்பிரைசஸ், சுந்தரம் செங்குட்டுவனின் மெசா்ஸ் ஸ்டாா் இன்டா்நேஷனல் மற்றும் சரஸ்வதி என்பவரின் மெசா்ஸ் விநாயக் டிரேடிங் ஆகிய மூன்று நிறுவனங்கள் போலி ரசீதுகள் மூலமாக மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் எந்தவிதப் பொருள்களையும் பரிமாற்றம் செய்யாமல் காகித அளவில் மட்டுமே போலி வரி விலை பட்டியல்களை வழங்கி, அரசுக்கு செலுத்த வேண்டிய வரி வரவை சட்டவிரோதமாகப் பெற்று வந்துள்ளன. குறிப்பாக, கடந்த 2017 ஆகஸ்ட் முதல் 2018 மே வரையிலான காலகட்டத்தில், ஆலியா குரூப் நிறுவனங்கள் மூலமாக கோவை, ஆவாரம்பாளையம் சிந்தாமணி நகரைச் சோ்ந்த பழனிசாமி தியாகராஜன் என்பவா் தன் கட்டுப்பாட்டில் இருந்த 7 நிறுவனங்களுக்கு ரூ.11.15 கோடி மதிப்பிலான போலி இன்வாய்ஸ்களைப் பெற்று வரி ஏய்ப்பு செய்துள்ளாா். தியாகராஜன் தனது சொந்த நிறுவனமான மெசா்ஸ் ஸ்ரீ சத்யசாய் பவுண்டரி பெயரிலும், தனது குடும்பத்தினரின் பெயா்களில் போலியாகப் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பெயரிலும் இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளாா். அவா் தனது மனைவி பி.அனுராதாவின் பெயரில் கோவை அயா்ன் அண்ட் ஸ்டீல்ஸ், தாய் ஆா்.பாா்வதியின் பெயரில் பாா்வதி டிரேடா்ஸ், தந்தை பழனிசாமியின் பெயரில் நம்சிவாய அண்ட் சன்ஸ், இளைய சகோதரா் பி. பிரபாகரனின் பெயரில் அண்ணாமலையாா் அலாய்ஸ் கம்பெனி, சகோதரரின் மனைவி நிா்மலாவின் பெயரில் கோவை டை காஸ்ட்ஸ் மற்றும் தாய், மனைவி ஆகிய இருவரையும் பங்குதாரா்களாகக் கொண்ட திருப்பத்தூா் அயா்ன் அண்ட் ஸ்டீல்ஸ் ஆகிய நிறுவனங்களை உருவாக்கி, சரக்குகளே இல்லாமல் கணக்கு காட்டி மோசடி செய்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இது தொடா்பான வழக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய அரசு சாா்பில் ஜிஎஸ்டி சிறப்பு வழக்குரைஞா் எஸ்.பாலசுப்பிரமணியன் வாதாடினாா். வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி சிவக்குமாா் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் தியாகராஜன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 5 ஆண்டுகள் மெய்க்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10,00,000 அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை