ரூ.272 கோடி லாட்டரி பரிசு - காலக்கெடு முடிய சில மணி நேரமே இருந்த நிலையில் உரிமை கோரிய நபர்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
ரூ.272 கோடி லாட்டரி பரிசு - காலக்கெடு முடிய சில மணி நேரமே இருந்த நிலையில் உரிமை கோரிய நபர்

பட மூலாதாரம், Getty Images ஒன்டாரியோ லாட்டரி மற்றும் கேமிங் கார்ப்பரேஷன் தகவலின்படி, காலாவதியாக சில மணி நேரங்களே இருந்த நிலையில், 40 மில்லியன் கனடிய டாலர்கள் (சுமார் ரூ.272 கோடி) பரிசுத் தொகையைப் பெற வெற்றியாளர் முன்வந்துள்ளார். ஓ.எல்.ஜி (OLG) ஊடகத் தொடர்பு இயக்குநர் டோனி பிடோன்டி பிபிசியிடம் கூறுகையில், லாட்டரி இயந்திரம் மூலம் அந்தச் சீட்டு சரிபார்க்கப்பட்டது. புதன்கிழமை நள்ளிரவுடன் அதன் காலக்கெடு முடிவடைய இருந்தது என தெரிவித்தார். லோட்டோ மேக்ஸ் லாட்டரி சீட்டை வாங்கியவரை அந்த நிறுவனம் நிறுவனம் தேடி வந்தது. கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி ஒன்டாரியோவின் கிரே கவுண்டியில் உள்ள கடையில் அந்தச் சீட்டு வாங்கப்பட்டது. இதற்கிடையில், கிட்டத்தட்ட ஓராண்டு கடந்துவிட்டது. வெற்றியாளரின் பெயரை அந்த நிறுவனம் வெளியிடவில்லை. சீட்டின் உண்மையான உரிமையாளர் அவர்தானா என்பதை உறுதிப்படுத்த அவரைத் தொடர்புகொண்டதாக தெரிவித்தது. "சீட்டின் உரிமையாளர் உறுதி செய்யப்பட்டால், அவரைப் பாராட்டும் நிகழ்ச்சி நடத்தி, அவரது கதையை ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் பகிர்வோம்" என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ப்ளூ மவுண்டெயின்ஸ், ஓவன் சவுண்ட் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட கிரே கவுண்டி, சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடமாகும். எனவே, சுற்றுலா வந்த ஒருவர் லாட்டரிச் சீட்டை வாங்கிவிட்டு, வீடு திரும்பிய பிறகு அதை மறந்திருக்கலாம் என்று ஓ.எல்.ஜி தெரிவித்திருந்தது. புதன்கிழமை சிடிவி (CTV) செய்தியிடம் பேசிய பிடோன்டி, அந்த நபர் லாட்டரிச் சீட்டை ஓ.எல்.ஜி செயலி மூலமாகவோ அல்லது கடைக்குச் சென்றோ சரிபார்க்காததுதான் வருத்தமளிக்கும் விஷயம் என்று கூறினார். லாட்டரியில் வெற்றி பெற்ற எண்கள் 06, 14, 17, 19, 26, 43, 45. கூடுதல் எண்ணாக 27 அறிவிக்கப்பட்டது என்று ஓ.எல்.ஜி தெரிவித்தது. End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு தொலைந்த லாட்டரிச் சீட்டைக் கண்டுபிடிக்க, உடைகள், கைப்பைகள், பணப்பைகள், மற்றும் வாகனங்களைச் சோதித்துப் பார்க்குமாறு லாட்டரி நிறுவனம் கேட்டுக்கொண்டது. லாட்டரிச் சீட்டு காலாவதியாகியிருந்தால், அந்த 40 மில்லியன் டாலர் (சுமார் 272 கோடி) பரிசுத் தொகையை எதிர்கால லாட்டரிப் போட்டிகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் கடந்த காலங்களிலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான லாட்டரிப் பரிசுகள் யாரும் பெறப்படாமல் இருந்துள்ளன. 2022ஆம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி, ஒன்டாரியோவின் ஸ்கார்பரோ பகுதியில் வாங்கப்பட்ட லோட்டோ மேக்ஸ் சீட்டுக்கு 70 மில்லியன் டாலர் (சுமார் 476 கோடி) பரிசு கிடைத்தது. ஆனால், அந்தப் பரிசைப் பெற யாரும் முன்வரவில்லை. இதுகுறித்து ஓ.எல்.ஜி கூறுகையில், 2,700 பேர் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டதாகவும், அவர்களில் ஒருவர் கூட உண்மையான வெற்றியாளர் இல்லை என்றும் தெரிவித்தது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1 சதவிகித பரிசுகளை யாரும் பெறுவதில்லை. அவை பெரும்பாலும் சிறிய தொகையாக இருக்கும் என்று பிடோன்டி தெரிவித்தார். கடந்த வாரம், ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த ஒருவர் கனடாவின் மிகப்பெரிய லாட்டரிப் பரிசான 90 மில்லியன் (சுமார் 612 கோடி) கனடா டாலரை வென்றார். ஆனால், அவரது பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை