ரூ.30 அரிசி திட்டம் தோல்வி: காரணம் என்ன?- அன்புமணி விளக்கம்

📅 📍 Tirunelveli, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ரூ.30 அரிசி திட்டம் தோல்வி: காரணம் என்ன?- அன்புமணி விளக்கம்

ரூ.30 அரிசிக்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாத நிலையில், திட்டம் தோல்வியடைந்ததாக அன்புமணி கூறியிருப்பது குறித்து... அன்புமணி - கோப்புப் படம் சென்னை: ரூ.30 அரிசிக்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாத நிலையில், அரிசி விலையைக் கட்டுப்படுத்த ஆலைகளில் இருந்து தரமான அரிசியை வாங்கி விநியோகிக்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் பக்க பதிவில் வெளியிட்டிருப்பதாவது: வெளிச்சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் 250 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் அறிமுகம் செய்யப்பட்ட ரூ.30 அரிசி கடந்த 14 நாள்களில் 114.80 டன் மட்டுமே விற்பனையாகியிருப்பதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சன்னரக அரிசி என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் இந்த வகை அரிசிக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது. மளிகைக் கடைகளில் விற்பனையாகும் அளவை விட குறைவு சென்னையில் கடந்த 17-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட குறைந்த விலையில் சன்னரக அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 250 அங்காடிகளுக்கு மொத்தம் 950 டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அதில் 114.80 டன் மட்டுமே விற்பனையாகியிருப்பதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்டு அக்டோபர் 29-ஆம் தேதியுடன் 14 நாள்கள் ஆகும் நிலையில், சராசரியாக ஒரு நாளைக்கு ஓர் அங்காடியில் 33 கிலோ அரிசி மட்டுமே விற்பனையாகியிருக்கிறது. இது கிராமங்களில் உள்ள மிகவும் சாதாரணமான மளிகைக் கடைகளில் ஒரு நாளைக்கு விற்பனையாகும் அளவை விட குறைவு ஆகும். தரமற்றதாக இருப்பது தான் காரணம் ரூ.30 அரிசி மக்களிடம் போதிய வரவேற்பை பெறாததற்கு அது தரமற்றதாக இருப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது. அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக தனியார் அரிசி ஆலைகளின் மொத்த உற்பத்தியில் 20 விழுக்காட்டை குறைந்த விலையில் வாங்கி, நியாயவிலைக் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று முதன் முதலில் ஆலோசனை வழங்கியது நான் தான். ஆந்திராவில் இத்தகையத் திட்டம் தான் செயல்படுத்தப்படுகிறது. அதே போன்ற திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டிருந்தால் அது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும். ஆனால், அமுதம் அங்காடிகள் மூலம் வழங்கப்படும் அரிசி தனியார் ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது அல்ல என்றும், உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டது தான் என்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி தெரிவித்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நியாயவிலைக் கடைகளில் வழங்குவதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் வாங்கப்படும் நெல்லை அரைத்து மெருகூட்டி வழங்கப்பட்டிருப்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. நியாயவிலைக் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை சற்று மெருகேற்றி ரூ.30க்கு விற்பனை செய்வது தான் இந்தத் திட்டம் தோல்வியடைந்ததற்கு காரணம் ஆகும். விலையைக் கட்டுப்படுத்த முடியும் வெளிச்சந்தையில் கடந்த ஜூலை மாதம் விண்ணை நோக்கி பாயத் தொடங்கிய அரிசி விலை இன்னும் நிற்காமல் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு பற்றாக்குறை ஒரு காரணம் என்றால், பதுக்கல் இன்னொரு காரணம் என்பதை மறுக்க முடியாது. எந்த வகை அரிசிகளின் விலை அதிகரித்து வருகிறதோ, அதே வகை அரிசியை குறைந்த விலையில் அரசே வழங்குவதன் மூலம் தான், வெளிச்சந்தையில் அதன் தேவையைக் குறைத்து விலையைக் கட்டுப்படுத்த முடியும். நியாயவிலைக் கடைகளில் விற்பனை எனவே, தொடக்கத்தில் இருந்தே பாமக வலியுறுத்தி வருவதைப் போன்று, தமிழகத்தில் அரிசி ஆலைகள் மற்றும் மொத்த வணிகர்களிடம் உள்ள சன்னரக பொன்னி அரிசியில் 20 சதவீதத்தை அடக்க விலைக்கு கொள்முதல் செய்து, கிலோ ரூ.50 என்ற விலையில் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை