ரூ.400 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
ரூ.400 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி

நீதிமன்ற உத்தரவையடுத்து, 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்காக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை அழைத்துச் சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீஸார். சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க கட்சி நிதி என்ற பெயரில் ரூ.400 கோடி வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விசாரணைக்கு பின்னர் அவரை நவம்பர் 4-ம் தேதி மாலை 5 மணிக்கு ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க ரூ.400 கோடிக்கு மேல் பணம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இளங்கோவன் அளித்த புகாரின்பேரில் திமுகவை சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், பி.டி.அரசகுமார் உள்ளிட்ட பலர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் அன்பில் மகேஸை போலீஸார் கடந்த அக்டோபர் 26-ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முத்துக்குமார் கடந்த அக்டோபர் 29-ம் தேதி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் அன்பில் மகேஸை 5 நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை கடந்த அக்டோபர் 30-ம் தேதி நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பாக நடந்தது. அப்போது அன்பில் மகேஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், ரிச்சர்ட்ஸன் வில்சன் ஆகியோரும், அரசு தரப்பில் குற்றவியல் சிறப்பு வழக்கறிஞர் உஷா ராணியும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட அன்பில் மகேஸை காவலில் எடுத்து விசாரிக்கக்கோரிய மனு மீதான உத்தரவை நவம்பர் 2-ம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணைக்காக அன்பில் மகேஸ் நேற்று காலை சிறையில் இருந்து அழைத்துவரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், “சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கியதற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். போலீஸார் அன்பில் மகேஸை காவலில் எடுத்து விசாரணை நடத்தும்பட்சத்தில், அதை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என்றார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உஷாராணி, “அனைத்து விசாரணைகளையும் முழுமையாக வீடியோ பதிவு செய்ய முடியாது. குறிப்பிட்ட விசாரணையை மட்டும் வீடியோ பதிவு செய்யலாம்” என்றார். இதையடுத்து நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, கைதாகியுள்ள அன்பில் மகேஸை நவம்பர் 2-ம் தேதியில் இருந்து நவம்பர் 4-ம் தேதி வரை 3 நாட்களுக்கு போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரிக்கலாம் என அனுமதியளித்து உத்தரவிட்டார். விசாரணை முடிந்து நவம்பர் 4-ம் தேதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் மீண்டும் அவரை ஆஜர்படுத்த வேண்டும் என்றும், விசாரணையின் போது அன்பில்மகேஸை மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ துன்புறுத்தக்கூடாது என்றும், விசாரணையின்போது அவரது வழக்கறிஞர் உடனிருக்க அனுமதிக்கலாம். ஆனால் அந்த வழக்கறிஞர் கேட்க முடியாத தூரத்தில் இருந்து விசாரணையை கண்காணிக்கலாம். ஒவ்வொரு நாளும் விசாரணை முடியும் போது 10 நிமிடங்கள் தனது வழக்கறிஞரை அன்பில் மகேஸ் சந்தித்துப் பேசலாம் எனவும் தனது உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஜாமீன் மனு மற்றும் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்கக் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 5-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மனைவியிடம் விசாரணை நடத்த முடிவு: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி ரூ.400 கோடி மோசடி வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை போலீஸ் காவலில் எடுத்துள்ள நிலையில், மோசடி மூலம் பெறப்பட்ட பணம் எங்கெங்கெல்லாம் பகிரப்பட்டது என்ற விபரம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். பெண் தொழில் அதிபரும், ஆடை வடிவமைப்பாளருமான சண்முகப்பிரியா வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அண்மையில் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்திருந்தனர். அந்த ஆவணங்கள் அடிப்படையிலும் போலீஸார் அன்பில் மகேஸிடம் நேற்று விசாரணை நடத்தினர். இதுஒருபுறம் இருக்க அன்பில் மகேஸின் மனைவி ஜனனியிடமும் விரைவில் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை