ரூ.400 கோடி ஊழல் வழக்கில் அன்பில் மகேஸுக்கு 5 நாள் போலீஸ் காவல் அனுமதி கோரிய மனு மீது நவ.2-ல் தீர்ப்பு

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
ரூ.400 கோடி ஊழல் வழக்கில் அன்பில் மகேஸுக்கு 5 நாள் போலீஸ் காவல் அனுமதி கோரிய மனு மீது நவ.2-ல் தீர்ப்பு

சென்னை: திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க, கட்சி நிதி என்ற பெயரில் ரூ. 400 கோடி வரை வசூலி்த்து மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரி்க்க அனுமதி கோரி, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எல்.எஸ்.சத்திய மூர்த்தி முன்னிலையில் நடந்தது. இதற்காக அன்பில் மகேஸ் புழல் சிறையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அன்பில் மகேஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், வழக்கறிஞர் ரிச்சர்ட்ஸன் வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது, அவர்கள் கூறியதாவது: எடை குறைந்து விட்டார் சிறையில் முதல் வகுப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் அன்பில் மகேஸுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை. சக கைதிகளுக்கு வழங்கும் சப்பாத்தியை வழங்கினர். இதனால் அவரது எடை 2 முதல் 4 கிலோ வரை குறைந்துள்ளது. போலீஸாரின் அனைத்து கேள்விகளுக்கும் அன்பில் மகேஸ் முறையாக பதில் அளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக வேறு ஏதேனும் ஆவணங்கள் தேவைப்படுகிறது எனக் கூறினால் அதையும் மறுக்காமல் வழங்க தயாராக இருக்கிறோம். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான கூட்டத்தில் அமைச்சர் என்ற முறையில் அன்பில் மகேஸும், கல்வித் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவத்துக்குப் பிறகு யாருக்குமே நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. ஆனால், தனியார் பள்ளி நிர்வாகிகள் தரப்பில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என இருந்த அங்கீகாரம் புதுப்பித்தலை 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றும்படி கோரிக்கை விடுத்தனர். அது தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து அதன் பிறகே அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஓடி ஒளிய மாட்டார் எந்த அரசாணை காரணமாக போலீஸார் தற்போது அன்பில் மகேஸை கைது செய்துள்ள னரோ, அதே அரசாணைதான் தற்போதும் அமலில் உள்ளது. கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டி அன்பில் மகேஸை கைது செய்துள்ள போலீஸார், லஞ்சம் கொடுத்த வர்களை இதுவரையிலும் கைது செய்யாதது ஏன்? யார், யாரெல்லாம் லஞ்சம் கொடுத்தார்களோ அவர்களையே இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்த்திருப்பது ஏன்? அன்பில் மகேஸ் எங்கும் ஓடி ஒளியப் போவதில்லை. முழுக்க, முழுக்க அரசியல் காரணமாகவே இந்த வழக்குப் பதியப்பட்டுள்ளது. சிறையில் விளக்கை எரியவிட்டு தூங்கச் சொல்கின்றனர். முதல் வகுப்பு வழங்கப்படவில்லை. சிறையில் வீட்டு உணவு, உடை, மருந்து வழங்க வேண்டுமெனக் கோருவது அடிப்படை உரிமை. அதையும் தர மறுக்கின்றனர். இவ்வாறு அவர்கள் வாதிட்டனர். போலீஸ் தரப்பில் பிரமாண பத்திரம் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான போலீஸ் உதவி ஆணையர் செந்தில், அன்பில் மகேஸை காவலில் எடுத்து விசாரிக்கக் கோருவது ஏன் என்பது தொடர்பாகப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர் உஷாராணி, ‘‘சிறையில் அன்பில் மகேஸுக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படும். வீட்டு உணவு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும். கட்சி நிதி எனக் கூறி ரூ. 400 கோடிக்கு மேல் லஞ்சமாக வசூலித்துள்ளனர். அந்த பணப்பரிமற்றம் குறித்தும், இந்த முறைகேட்டில் வேறு யார், யாருக்குத் தொடர்புள்ளது என்பது குறித்தும், முத்துக்குமார், சுரேஷ், அரசக்குமாரின் பங்கு குறித்தும், அன்பில் மகேஸ் மற்றும் அவரது பினாமிகளின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தினால் மட்டுமே விடை கிடைக்கும். எனவே 5 நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’’ என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எல்.எஸ். சத்திய மூர்த்தி, போலீஸ் காவல் கோரும் மனு மீதான தீர்ப்பை நவ.2-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். வீட்டு உணவுக்கு அனுமதி மேலும், ‘அன்பில் மகேஸ் கேட்கும் உணவு வகைகளை சிறை சமையல் அறையிலேயே தயாரித்து வழங்க வேண்டும். இல்லாவிட்டால், வீட்டில் இருந்து தயாரித்து தரும் உணவை சாப்பிட அனுமதிக்க வேண்டும். அந்த உணவுக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக அவரிடம் ஒப்புதல் கடிதம் பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை