ரூ.450 கோடிக்கு ஏலம் போன டைனோசர் எலும்புக்கூடு - விஞ்ஞானிகள் கவலை ஏன்?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
ரூ.450 கோடிக்கு ஏலம் போன டைனோசர் எலும்புக்கூடு - விஞ்ஞானிகள் கவலை ஏன்?

பட மூலாதாரம், Getty Images சிறிய வகை 'டைரனோசொரஸ் ரெக்ஸ்' (T. rex) என்று முன்பு தவறாக அடையாளம் காணப்பட்ட ஒரு டைனோசரின் எலும்புக்கூடு, பின்னர் தனி இனத்தைச் சேர்ந்தது என உறுதிப்படுத்தப்பட்டது. இந்த எலும்புக்கூடு ஏலத்தில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.450.42 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. 'ஜோடி' (Jodie) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலும்புக்கூடு சுமார் 10 அடி உயரம் கொண்டது. நியூயார்க்கைச் சேர்ந்த சதபீஸ் (Sotheby's) ஏல நிறுவனம் இதனை விற்பனை செய்துள்ளது. இது தனித்துவமான டைனோசர் இனம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி ஓராண்டுக்குப் பிறகு இந்த ஏலம் நடைபெற்றுள்ளது. இறைச்சி உண்ணும் இந்த டைனோசர், கிரெட்டேசியஸ் காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்தது. ஏலத்திற்கு முன்பு, இதன் விலை குறைந்தது 9 மில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்த்ததைவிடப் பல மடங்கு அதிக விலைக்கு இது விற்பனையானது. இதே ஏல நிறுவனம், கடந்த ஜூலை மாதம் 'கஸ்' (Gus) எனப் பெயரிடப்பட்ட டைரனோசொரஸ் ரெக்ஸ் எலும்புக்கூட்டை 50.1 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்து சாதனை படைத்திருந்தது. இந்த ஏலம், டைனோசர் புதைபடிவங்களைத் தனியார் வசம் விற்பனை செய்வது சரியா அல்லது அவற்றைப் பொதுமக்கள் பார்வைக்கு அருங்காட்சியகங்களில் வைக்க வேண்டுமா என்ற விவாதத்தை விஞ்ஞானிகளிடையே மீண்டும் எழுப்பியுள்ளது. பட மூலாதாரம், Reuters 'ஜோடி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலும்புக்கூடு, காட்சிக்கு வைப்பதற்கு ஏற்ற வகையில் நேர்த்தியாகத் தயார் செய்யப்பட்டுள்ளதாக சதபீஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் சுமார் 191 புதைபடிவ எலும்புத் துண்டுகள் உள்ளன. குறிப்பாக, இதன் மண்டை ஓடு பெரும்பாலும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. நானோடைரானஸ் பேரினத்தைச் சேர்ந்த இத்தகைய எலும்புக்கூடுகள் இதுவரை மூன்று மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபரில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இந்த டைனோசர் தனி இனம் என்பதை உறுதிப்படுத்திய பிறகு, ஏலத்திற்கு வந்த முதல் எலும்புக்கூடு இதுவாகும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த எலும்புக்கூட்டை வாங்கியவர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஆறு பேர் பங்கேற்ற ஏலம் 12 நிமிடங்கள் நீடித்தது. இறுதியில் அதிக தொகைக்கு ஏலம் கேட்டவருக்கு எலும்புக்கூடு விற்கப்பட்டது. End of அதிகம் படிக்கப்பட்டது இதுவரை ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட டைனோசர் புதைபடிவங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்டவற்றின் பட்டியலில் 'ஜோடி' இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 50.1 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட 'கஸ்' (Gus) முதலிடத்தில் உள்ளது. 2024 ஜூலையில் சதபீஸ் நிறுவனம் 44.6 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்த 'அபெக்ஸ்' (Apex) என்ற ஸ்டெகோசொரஸ் புதைபடிவம் மூன்றாவது இடத்தில் உள்ளது. பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் தொல்லுயிர் ஆய்வாளர் மேகன் ஜேக்கப்ஸ், செவ்வாய்க்கிழமை பிபிசி ரேடியோ 4-ன் 'டுடே' நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, நானோடைரானஸ் நீண்ட காலமாக டைரனோசொரஸ் ரெக்ஸ் (T. rex) டைனோசரின் இளம் அல்லது வளரிளம் பருவத்தைச் சேர்ந்ததாகவே கருதப்பட்டு வந்தது என்று தெரிவித்தார். "ஆனால், இது டி. ரெக்ஸ்-ஐ விட மிகவும் சிறியது. இதன் உடல் மெலிந்தும், நீண்டும் காணப்படுகிறது. இறைச்சியை வெட்டுவதற்கு ஏற்ற கத்தி போன்ற கூர்மையான பற்களையும் கொண்டுள்ளது," என்று ஜேக்கப்ஸ் விளக்கினார். டைரனோசொரஸ் ரெக்ஸ் மற்றும் நானோடைரானஸ் ஆகிய இரண்டும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவை. அதாவது, சுமார் 6.7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கிரெட்டேசியஸ் காலத்தின் இறுதியில் இவை வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். நானோடைரானஸ் தனி டைனோசர் இனமாக வகைப்படுத்தப்படுவதற்கு முன்பு, 'ஜோடி' என்று செல்லமாகப் பெயரிடப்பட்ட இந்தப் புதைபடிவம், 2023 அக்டோபரில் லண்டனில் நடைபெற்ற சர்வதேசக் கலைக் கண்காட்சியான 'ஃப்ரீஸ் மாஸ்டர்ஸ்' நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது, இது டி. ரெக்ஸ்-ன் இளம்பருவ எலும்புக்கூடு என்றே அறிமுகப்படுத்தப்பட்டது. பட மூலாதாரம், Getty Images அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில், ஜோடி பியர்சன் என்ற விவசாயி தனது நிலத்தில் ஒரு டைனோசர் எலும்புக்கூட்டைக் கண்டுபிடித்தார். ஹெல் க்ரீக் ஃபார்மேஷன் என்று அழைக்கப்படும் இந்தப் பகுதி, டைனோசர் புதைபடிவங்கள் அதிகம் காணப்படும் இடமாகும். பின்னர், வணிக நோக்கில் புதைபடிவங்களை அகழ்ந்தெடுக்கும் தொல்லுயிர் ஆய்வாளர் கிளேட்டன் ஃபிப்ஸ், அந்த எலும்புக்கூட்டைத் தோண்டியெடுத்தார். உலகப் புகழ்பெற்ற 'சண்டையிடும் டைனோசர்கள்' புதைபடிவத்தைக் கண்டுபிடித்தவரும் கிளேட்டன் ஃபிப்ஸ்தான். 2006-ஆம் ஆண்டு, ஜோடியின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் இந்தப் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், ஒரு நானோடைரானஸ் மற்றும் ஒரு டிரைசெராடாப்ஸ் ஆகிய டைனோசர்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்ட நிலையில் இருந்ததற்கான எச்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் புதைபடிவம், லிண்ட்சே சானோ மற்றும் ஜேம்ஸ் நாப்போலி ஆகியோர் வெளியிட்ட ஆய்வுக்கு முக்கிய ஆதாரமாக அமைந்தது. நானோடைரானஸ் என்பது டி. ரெக்ஸ்-இலிருந்து வேறுபட்ட தனி இனம் என்பதை அந்த ஆய்வு உறுதிப்படுத்தியது. இதன் மூலம், இந்த இரண்டு டைனோசர்களும் வெவ்வேறு இனங்களா என்பது குறித்து பல பத்தாண்டுகளாக நீடித்த விவாதத்துக்கு முடிவு கிடைத்தது. இதற்கிடையில், புதைபடிவங்களைச் சேகரிக்கும் சந்தையில் பெரும் செல்வந்தர்கள் பெருமளவில் நுழைவது, எதிர்பாராத புதிய சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர். இத்தகைய விவாதங்களுக்கு மத்தியில், ஜோடி பியர்சனின் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த எலும்புக்கூடு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது முக்கியத்துவம் பெறுகிறது. பட மூலாதாரம், Getty Images 'கஸ்' என்று பெயரிடப்பட்ட டைனோசர் எலும்புக்கூடு ஏலத்தில் விற்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுபோன்ற அரிய புதைபடிவங்கள் தனியார் சேகரிப்புகளில் முடங்கிவிடக் கூடாது என்று ஆராய்ச்சியாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். அவை அருங்காட்சியகங்களில் வைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போதுதான் பொதுமக்களும் அறிவியல் ஆய்வாளர்களும் அவற்றைப் பார்வையிடவும் ஆய்வு செய்யவும் தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்கும். எடின்பர்க் பல்கலைக்கழகப் பேராசிரியரும், ஜுராசிக் பார்க் திரைப்படங்களுக்கான ஆலோசகராகப் பணியாற்றியவருமான ஸ்டீவ் புருசாட், ஜூலை மாதம் பிபிசிக்கு அளித்த நேர்காணலில், டி. ரெக்ஸ் எலும்புக்கூடு ஏலத்தில் விற்கப்பட்டதை "கவலைக்குரிய நிகழ்வு" என்று குறிப்பிட்டார். "இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து வாங்கும் வசதி கொண்ட அருங்காட்சியகமோ பல்கலைக்கழகமோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்று அவர் கூறினார். "ஒரு பெரும் செல்வந்தர் மோனாலிசா ஓவியத்தைத் தனிப்பட்ட முறையில் வாங்கி, யாரும் பார்க்க முடியாதபடி மறைத்து வைத்துவிட்டால் என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள். அப்போது, பொதுமக்களால் அந்த ஓவியத்தைப் பார்க்கவோ ரசிக்கவோ முடியாமல் போய்விடும்" என்றும் அவர் கவலை தெரிவித்தார். இத்தகைய ஏல விற்பனைகள் வழக்கமான ஒன்றாக மாறிவிடக் கூடாது என்றும் புருசாட் விருப்பம் தெரிவித்தார். அவ்வாறு நடந்தால், அறிவியல் ஆராய்ச்சிக்கும் பொதுமக்களின் கல்விக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். பட மூலாதாரம், Getty Images செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலம் குறித்து பிபிசியிடம் பேசிய பேராசிரியர் புருசாட், "நானோடைரானஸ் முற்றிலும் தனித்துவமான டைனோசர் இனம் என்பதை நாம் இப்போதுதான் உறுதிப்படுத்தியுள்ளோம். இத்தகைய முக்கியமான தருணத்தில், அந்த இனத்தைச் சேர்ந்த மிகச் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் ஒன்று, பெரும் தொகைக்கு ஒரு தனிநபரால் வாங்கப்பட்டுள்ளது" என்று கூறினார். "அருங்காட்சியகம் போன்ற பொதுவெளியில் வைக்கப்பட்டு, குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு அறிவியல் ஆர்வத்தைத் தூண்ட வேண்டிய இந்த எலும்புக்கூடு, தனிநபர் ஒருவரின் சேகரிப்பில் மறைந்துவிடக்கூடும் என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது" என்றார். இருப்பினும், இந்த விவகாரத்தை மற்றொரு கோணத்திலும் பார்க்க வேண்டும் என்று தொல்லுயிர் ஆய்வாளர் மேகன் ஜேக்கப்ஸ் தெரிவித்தார். இத்தகைய புதைபடிவங்களைக் கண்டறிந்து, அகழ்ந்தெடுத்து, பாதுகாப்பதற்கு அதிக நேரமும் உழைப்பும் பணமும் தேவைப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். "இவ்வளவு பெரிய தொகைக்கு இந்தப் புதைபடிவங்களை விற்க விரும்புபவர்களை நான் குறை கூற விரும்பவில்லை," என்று ஜேக்கப்ஸ் கூறினார். "இது கவலை அளிக்கும் விஷயம்தான். இருப்பினும், இதுபோன்ற பெரும்பாலான புதைபடிவங்கள் இறுதியில் பொதுமக்களின் பார்வைக்கு வந்துள்ளன. பல புதைபடிவங்கள் அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இந்த எலும்புக்கூடும் ஒருநாள் அருங்காட்சியகத்தில் இடம்பெறும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை" என்று அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை