ரூ.59,000 கோடி கிரிப்டோகரன்சி திருட்டு: பினன்ஸ் ஹேக்கிங் பற்றி இதுவரை தெரியவந்தது என்ன?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
ரூ.59,000 கோடி கிரிப்டோகரன்சி திருட்டு: பினன்ஸ் ஹேக்கிங் பற்றி இதுவரை தெரியவந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைத் தளமான பினன்ஸ் (Binance), இதுவரை இல்லாத மிகப்பெரிய கிரிப்டோ ஹேக்கிங் தாக்குதலாகக் கருதப்படும் ஒரு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதில் 6.3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய்) மதிப்பிலான கிரிப்டோகரன்சி திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கிரிப்டோ என்பது பணம் அல்லது நாணயங்களைப் போல நேரடியாகக் கையில் வைத்திருக்க முடியாத ஒரு வகையான டிஜிட்டல் சொத்து. இதனைப் பயன்படுத்தவும் நிர்வகிக்கவும் மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் அல்லது கணினிகளில் உள்ள டிஜிட்டல் வாலெட்களைப் பயன்படுத்துகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து என்ன நடந்தது என்பதைக் கண்டறிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், ஏற்பட்ட அனைத்து இழப்புகளையும் ஈடுசெய்வதாகவும் பினன்ஸ் நிறுவனத்தின் இணை தலைமைச் செயல் அதிகாரி ரிச்சர்ட் டெங் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து இதுவரை நமக்குத் தெரிந்த தகவல்கள் என்ன? வர்த்தக அளவின் அடிப்படையில், உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைத் தளமாக பினன்ஸ் விளங்குகிறது. இதில் பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்களை வாங்கவும், விற்கவும், பரிமாற்றம் செய்யவும் முடியும். மேலும், இதில் பணத்தைச் செலுத்தவும் திரும்பப் பெறவும் முடியும். 2017ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், உலகம் முழுவதும் பலநூறு மில்லியன் பயனர்கள் பதிவு செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பரிவர்த்தனைத் தளம் பல்வேறு விசாரணைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. குறிப்பாக, 2023ஆம் ஆண்டு, அப்போதைய தலைமைச் செயல் அதிகாரி சாங்பெங் ஜாவோ, பணமோசடி தொடர்பான சட்ட விதிமீறல்களை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மில்லியன்கணக்கான டாலர்களை அனுப்ப உதவியதாக அந்நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் கடந்தாண்டு ஒரு வழக்குத் தொடரப்பட்டது End of அதிகம் படிக்கப்பட்டது 2024 இல், தங்களிடம் 160 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாக அந்நிறுவனம் கூறியது. பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு பினன்ஸின் உலகளாவிய மையப்படுத்தப்பட்ட பரிவர்த்தனைத் தளமான Binance.com மீது இந்த ஹேக்கிங் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசிப்பவர்களுக்காக பிரத்யேகமாக வர்த்தகச் சேவைகளை வழங்கும் Binance.us தளம், இந்தத் தாக்குதலில் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. "எங்களது முதற்கட்ட விசாரணையின்படி, இந்தப் பாதுகாப்பு அத்துமீறல், டெவ்ஆப்ஸ் பொறியாளர் ஒருவரின் மடிக்கணினியை ஹேக்கர்கள் ஊடுருவதால் நடந்திருக்கலாம்." என்று இந்தச் சம்பவம் குறித்து பினன்ஸ் நிறுவனத்தின் இணை தலைமைச் செயல் அதிகாரி ரிச்சர்ட் டெங் அறிக்கை வெளியிட்டுள்ளார். "இதன் மூலம், தாக்குதல் நடத்திய நபருக்கு ஒரு சர்வீஸ் கன்டெய்னரை அணுகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் வழியாக, அனுமதியின்றி பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான பரிவர்த்தனைகளை அவர் மேற்கொண்டுள்ளார்." இந்த ஹேக்கிங் தாக்குதல் "ஒரே கிளிக்கில் நடத்தப்பட்ட எளிய தாக்குதல் அல்ல" என்றும், "மிகவும் சிக்கலான தாக்குதல் நடைமுறையைக் கொண்டது" என்றும் அவர் தெரிவித்தார். "பொறியாளர் ஒருவரை 'ஏதோவொரு சோதனையில் பங்கேற்குமாறு நம்பவைத்து ஏமாற்றியிருக்கலாம்'. அந்தச் சோதனையின்போது அவரது மடிக்கணினியில் தீங்கு விளைவிக்கும் மென்பொருள் ஊடுருவியிருக்கலாம்" என்கிறார் சைபர் பாதுகாப்புத் தளமான இல்லுமியோவின் தொழில்துறை உத்திப் பிரிவின் துணைத் தலைவர் ரகு நந்தகுமாரா. அந்த மடிக்கணினிக்கு ஏற்கெனவே போதுமான பாதுகாப்பு அனுமதிகள் இருந்ததால், அதன் மூலம் தாக்குதல் நடத்தியவர் நிறுவனத்தின் நேரடிச் செயல்பாட்டுக் கட்டமைப்பை அணுகியிருக்கலாம். அங்கிருந்து டிஜிட்டல் வாலெட்களையும் அணுகுவதற்கான வழி கிடைத்திருக்கலாம் என்று ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிப்பதாக அவர் கூறினார். "கணித அடிப்படையிலான பாதுகாப்பு அரண்களைக் கொண்டு ஒரு பெட்டகத்தை உருவாக்கலாம். ஆனால், அதன் சாவியை வைத்திருப்பவரையே ஏமாற்றிவிட்டால், அந்தப் பெட்டகத்தைத் திறந்துவிட முடியும்" என்கிறார் செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு மற்றும் பயோமெட்ரிக்ஸ் நிறுவனமான FARx-இன் தலைவர் டாக்டர் கிளைவ் சம்மர்ஃபீல்டு. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. இருப்பினும், சில ஆய்வு நிறுவனங்கள் வட கொரியாவுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று கூறியுள்ளன. ஆனால், இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ளும் டிஆர்எம் லேப்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பினன்ஸ் மீதான தாக்குதலில் காணப்படும் பல அம்சங்கள், இதற்கு முன்பு வட கொரியாவுடன் தொடர்புபடுத்தப்பட்ட சைபர் தாக்குதல்களை ஒத்திருப்பதாகக் கூறியுள்ளது. இதில், 2025ஆம் ஆண்டு பைபிட் (ByBit) பரிவர்த்தனைத் தளத்தில் நடத்தப்பட்ட 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஹேக்கிங் தாக்குதலும் அடங்கும். இதற்கு முந்தைய தாக்குதல்கள், வட கொரிய அரசுக்காக நேரடியாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்படும் சைபர் குற்றவாளிகள் குழுவான 'லாசரஸ் குரூப்' உடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழு 'டிரேடர் ட்ரெய்ட்டர்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல்களில் தங்களுக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை வட கொரியா எப்போதும் மறுத்தே வந்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கும் வட கொரியாவுக்கும் உள்ள சாத்தியமான தொடர்பு குறித்து பிபிசி எழுப்பிய கேள்விகளுக்கு பினன்ஸ் நிறுவனம் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. பட மூலாதாரம், Getty Images பினன்ஸ் பயனர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதாக ரிச்சர்ட் டெங் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து டெபாசிட் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதுபோன்ற சூழல்களைக் கையாள்வதற்காக நிறுவனம் ஏற்கெனவே உருவாக்கி வைத்துள்ள அவசரகால நிதியிலிருந்து அனைத்து இழப்புகளும் ஈடுசெய்யப்படும். மீதமுள்ள தொகை நிறுவனத்தின் சொந்த நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சொத்துகளை முடக்குவதற்காகக் கூட்டாளி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக பினன்ஸ் தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. "பணம் திரும்பப் பெறும் சேவையை மீண்டும் தொடங்குவதற்காக எதிர்பார்க்கப்பட்டுள்ள 45 மணி நேர காலக்கெடுவின்படி நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயலும் ஹேக்கர்கள் குறித்து மற்ற கிரிப்டோ தளங்களின் பயனர்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். "உங்கள் நிதி ஆபத்தில் இருப்பதாகக் கூறும் மின்னஞ்சல்கள், உதவி செய்வதாகக் கூறும் ஒரு போலி ஆதரவுக் கணக்குகள், அல்லது உங்கள் கிரிப்டோகரன்சியைப் பாதுகாப்பான வாலெட்டுக்கு மாற்றுமாறு வலியுறுத்தும் செய்திகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று நார்ட்விபிஎன் (NordVPN)-இன் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி மரிஜஸ் ப்ரீடிஸ் கூறினார். "பினன்ஸ் செயலி அல்லது நீங்கள் ஏற்கெனவே நம்பும் இணையதள முகவரி மூலம் தகவல்களைச் சரிபாருங்கள். தெரியாத நபர்களிடமிருந்து வரும் செய்திகளில் உள்ள இணைப்புகளைத் திறக்காதீர்கள். உங்கள் கடவுச்சொல், சரிபார்ப்புக் குறியீடுகள் அல்லது வாலெட்டை மீட்டெடுப்பதற்கான ரகசியச் சொற்றொடர் ஆகியவற்றை யாரிடமும் பகிர வேண்டாம்" என்றும் அவர் அறிவுறுத்தினார். பட மூலாதாரம், Getty Images இந்த ஹேக்கின் விளைவுகள் "பினன்ஸையும் தாண்டிப் பரவக்கூடும்" என்கிறார் பின்சென்ட் மேசன்ஸ் என்ற சட்ட நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக மோசடி நிபுணரான ஜெனிஃபர் கிரேவன். "கிரிப்டோ துறையின் சில பகுதிகள் எந்த அளவுக்கு பலவீனமாக உள்ளன என்பதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்துகிறது" என்று அவர் கூறினார். "பினன்ஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட ஒரு தளமே கடுமையான சைபர் தாக்குதலுக்கு உள்ளாக முடியும் என்றால், சிறிய நிறுவனங்கள் மற்றும் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையாத தளங்கள், நாணயங்களின் பாதுகாப்பு குறித்து ஒழுங்குமுறை அமைப்புகள் நிச்சயம் கேள்வி எழுப்பும்" என்றார். இந்தத் தாக்குதல், கிரிப்டோ துறையில் நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பக் கட்டமைப்பையும் வாடிக்கையாளர்களையும் எவ்வாறு பாதுகாக்கின்றன என்பது குறித்த கண்காணிப்பையும் ஆய்வுகளையும் மேலும் தீவிரப்படுத்தும் என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதலில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை. இருப்பினும், மென்பொருள்களில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றை எப்படிப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தலாம் என்பதைக் கண்டறிவதில், மனித ஹேக்கர்களைவிட ஏஐ முகவர்களால் மிக வேகமாகச் செயல்பட முடியுமா என்ற கவலை நிதித்துறையில் பரவலாக நிலவுகிறது. இதனால், ஹேக்கர்கள் அந்தப் பாதுகாப்புக் குறைபாடுகளைப் பயன்படுத்துவதற்கு முன்பாகவே அவற்றைச் சரிசெய்வதில் நிதி நிறுவனங்கள் சிரமத்தை எதிர்கொள்ளக்கூடும் என்று இங்கிலாந்து வங்கி எச்சரித்துள்ளது. பாரம்பரிய நாணயங்களைப் போல கிரிப்டோகரன்சி மத்திய வங்கிகளாலோ அரசாங்கங்களாலோ கட்டுப்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக, இணையம் வழியாக முதலீடு செய்யவும் பணத்தைப் பரிமாற்றம் செய்யவும் கிரிப்டோகரன்சி ஒரு பிரபலமான வழியாக மாறி வருகிறது. பணப் பரிவர்த்தனைகளில் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு இல்லாதிருப்பது நிதிச் சுதந்திரத்தை அளிக்கும் என்று நம்புபவர்களிடையே இது வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், இதன் மதிப்பு மிகவும் நிலையற்றது. வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்களின் நடவடிக்கைகளைப் பொறுத்து கிரிப்டோகரன்சியின் மதிப்பு திடீரென உயரவோ குறையவோ செய்யும். கிரிப்டோகரன்சி மூலம் நிதியளிக்கப்படும் முன்பணம் செலுத்தும் அட்டைகள் மற்றும் மெய்நிகர் அட்டைகளை வழங்கும் சோல்கார்ட் (Solcard) தளத்தின் தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 56 கோடி முதல் 74.1 கோடி பேர் வரை கிரிப்டோகரன்சியை வைத்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை