ரூ.634 கோடி ஊழல் புகார் தொடர்பாக கே.என்.நேரு தொடர்​புடைய 25 இடங்களில் திடீர் சோதனை

📅 📍 Vellore, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
ரூ.634 கோடி ஊழல் புகார் தொடர்பாக கே.என்.நேரு தொடர்​புடைய 25 இடங்களில் திடீர் சோதனை

சென்னை: திமுக முன்​னாள் அமைச்​சர் கே.என்.நேரு மீது ரூ.634 கோடி ஊழல் புகார் தொடர்​பாக, தமிழகம் முழு​வதும் அவருக்​கும் அவருடன் தொடர்​புடைய​வர்​களுக்​கும் சொந்​த​மான 25 இடங்​களில் லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் நேற்று திடீர் சோதனை நடத்​தினர். இதில், பல்​வேறு முக்​கிய ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​ட​தாகத் தகவல் வெளியாகி உள்​ளது. கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில், நக​ராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை​யில் சாலை உள்​ளிட்ட கட்​டு​மானப் பணிகளுக்கு ஒப்​பந்​தம் வழங்​கியதில் முறைகேடுகள் நடை​பெற்​றுள்​ளது. அரசுப் பணி​யிடங்​களை நிரப்ப லஞ்​சம் பெறப்​பட்​டுள்​ளது என்று புகார்​கள் எழுந்​தன. இதுதொடர்​பாக வழக்​குப் பதிவு செய்ய தமிழக லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு, மத்​திய அரசின் அமலாக்​கத் துறை 2 கடிதங்​களை அனுப்​பியது. முதல் கடிதத்​தில், நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் ரூ.1,020 கோடி அளவுக்கு ஒப்​பந்த முறைகேடுகள் நடை​பெற்​றதாகக் கூறி விசா​ரணை நடத்த வலியுறுத்​தப்​பட்​டது. அதனுடன் 252 ஆதார ஆவணங்​களும், 300 புகைப்​படங்​களும் இணைக்​கப்​பட்​ட​தாகத் தெரி​விக்​கப்​பட்​டது. அதன்​பின், 2-வது கடிதத்​தில், நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் 2,538 பணி​யிடங்​களை நிரப்​பியதில் ரூ.634 கோடி லஞ்​சம் பெறப்​பட்​ட​தாகக் குற்​றம் சாட்​டப்​பட்​டது. உதவிப் பொறி​யாளர்​கள், இளநிலைப் பொறி​யாளர்​கள், நகரத் திட்ட அலு​வலர்​கள் உள்​ளிட்ட பணி​யிடங்​களை நிரப்​பியதில் முறைகேடுகள் நடை​பெற்​றதாக அந்​தக் கடிதத்​தில் குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. இந்​தப் புகார்​கள் தொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். இதற்கிடையே, மேற்கூறிய கடிதங்​களின் அடிப்​படை​யில் வழக்​குப் பதிவு செய்து நட​வடிக்கை எடுக்க உத்​தர​விடக் கோரி, அதிமுகவைச் சேர்ந்த இன்​ப​துரை சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றமும் லஞ்சப் புகார் தொடர்​பாக உரிய நட​வடிக்கை எடுக்க உத்​தர​விட்​டது. அதன்​பேரில், பணி​யிட நியமனங்​களில் ரூ.634 கோடி ஊழல் புகார் தொடர்​பாக, கே.என்.நேரு உள்​ளிட்​டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்​புத்துறை போலீ​ஸார் வழக்​குப்பதிவு செய்​தனர். இந்த வழக்கை எதிர்த்து கே.என்.நேரு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த சீராய்வு மனு தள்​ளு​படி செய்​யப்​பட்​டது. இந்த வழக்​கின் தொடர்ச்​சி​யாக, திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேரு​வின் வீட்​டில் நேற்று காலை 6.30 மணி​யளவில் லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் திடீர் சோதனை நடத்​தினர். திருச்சி லஞ்ச ஒழிப்​புப் பிரிவு துணைக் காவல் கண்​காணிப்​பாளர் ஹேமச்​சித்ரா தலை​மையில் 15-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் 3 வாகனங்களில் வீட்​டுக்​குச் சென்​றனர். வீட்​டில் சுமார் 8 மணி நேரத்​துக்​கும் மேலாக சோதனை நடை​பெற்​றது. சோதனை குறித்த தகவல் பர​வியதால், அவரது வீட்​டின் முன்பு திமுகவினர் திரண்​டனர். இத​னால் அந்​தப் பகுதி​யில் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டது. கே.என்.நேரு​வின் சகோ​தரர் ரவிச்​சந்​திரனுக்​குச் சொந்​த​மான சென்னை ராஜா அண்​ணா​மலைபுரம், கிருஷ்ணாபுரத்​தில் உள்ள வீடு, அலு​வல​கத்​திலும் சோதனை நடத்​தினர். கோவை சிங்​காநல்​லூர் அருகே உள்ள தனியார் அடுக்​குமாடிக் குடி​யிருப்​பில் உள்ள கே.என்.நேரு​வின் சகோ​தரர் கே.என்.மணிவண்​ணனின் அலு​வல​கத்திலும் ஜி.வி.ரெசிடென்சி பகுதி​யில் உள்ள அவரது வீட்​டிலும் சோதனை நடை​பெற்​றது. அப்​போது மணிவண்​ணன் வீட்​டில் இல்லை. அங்​கிருந்​தவர்​களிடம் ஆவணங்​கள் தொடர்​பாக விசா​ரணை நடத்தப்பட்​டது. வடவள்ளியில் மணிவண்ணனின் உதவியாளர் வீட்டிலும் சோதனை நடந்தது. நாமக்​கல் எம்.ஜி. நகரில் உள்ள திமுக முன்​னாள் எம்​எல்ஏ பெ.ராமலிங்​கத்​தின் வீட்​டிலும் சோதனை நடந்​தது. துணைக் காவல் கண்​காணிப்​பாளர் சுபாஷினி தலை​மையி​லான போலீ​ஸார், வங்​கிப் பரிவர்த்​தனைகள் உள்​ளிட்ட ஆவணங்​களை ஆய்வு செய்​தனர். மேலும், கே.என்.நேரு​வின் உறவினர் துரை வீட்​டுக்​குச் சென்ற போலீ​ஸார், வீடு பூட்​டப்​பட்​டிருந்​ததால் அங்கு நோட்​டீஸ் ஒட்​டிச் சென்​றனர். அவர் சிங்​கப்பூரில் இருப்​ப​தாகவும், நவம்​பர் 13-ம் தேதி திரும்​புவதாகவும், விசா​ரணைக்கு ஒத்​துழைப்​ப​தாகவும் தெரி​வித்​துள்​ளார். திமுக முன்னாள் எம்எல்ஏ நந்​தகுமாரின் காட்பாடி வீட்​டில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்​புப் பிரிவு துணைக் காவல் கண்​காணிப்​பாளர் ராஜு தலை​மையி​லான குழுவினர் சோதனை​யில் ஈடு​பட்​டனர். காட்பாடியில் தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்​டில் ராணிப்​பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்​புப் பிரிவு துணைக் காவல் கண்​காணிப்​பாளர் கணேசன் தலை​மையி​லான குழு​வினர் 3 மணி நேரம் சோதனை நடத்​தினர். இந்த சோதனை​களின் போது வழக்​குடன் தொடர்​புடைய 170 ஆவணங்​கள், 13 மின்​னணு சாதனங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டதாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். திசை திருப்ப சோதனை சோதனைக்​குப் பிறகு செய்​தி​யாளர்​களிடம் பேசிய கே.என்.நேரு கூறிய​தாவது: தமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு சீர்​கேட்டை திசை திருப்​பவே இந்த சோதனை நடத்​தப்​பட்​டுள்​ளது. எனது வீட்​டில் இருந்து ஆவணங்​கள் எதையும் கைப்​பற்​றவில்லை. எனது சகோ​தரர் மணிவண்​ணனுக்​குச் சொந்​த​மான 2 மடிக் கணி​னிகளைப் போலீ​ஸார் எடுத்​துச் சென்​றுள்​ளனர். முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா ஆட்​சியில் எங்​கள் மீது தொடரப்​பட்ட வழக்​கு​களைச் சட்​டரீதி​யாக எதிர்​கொண்​டதைப் போல, இப்​போதும் சட்​டப்​படி எதிர்​கொள்​வோம். என்னை முடக்​கினாலும், தேர்​தல் பணிகளை மேற்கொள்ள ஏராளமான திமுக தொண்​டர்​கள் உள்ளனர். திமுகவை யாராலும் முடக்க முடி​யாது. இவ்​வாறு அவர் கூறினார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை