ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து... ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை - படம்: ஆயில் இந்தியா நிறுவனம் ஆயில் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் காலியாக உள்ள கிரேடு 'ஏ, பி' மற்றும் சி' நிலை பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் வரும் நவ.14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து பார்ப்போம்... வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: HRAQ/REC-EX-B/2026-03 பணி: Superintending Research Scientist தகுதி: வேதியியல், புவியியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் கெமிக்கல், பெட்ரோலியம் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.80,000 - 2,20,000 வயதுவரம்பு: 37-க்குள் இருக்க வேண்டும். பணி: Senior Officer(Mechanical) காலியிடங்கள்: 14 தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000 வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும். பணி: Senior Officer(Petroleum) தகுதி: பொறியியல் துறையில் பெட்ரோலியம் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000 வயதுவரம்பு: 29-க்குள் இருக்க வேண்டும். பணி: Senior Accounts Officer/Senior Internal Auditor தகுதி: ICAI, ICMAI அமைப்பில் Associate Member-ஆக இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000 வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும். பணி: Hindi Officer(Official Language) தகுதி: ஹிந்தி பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000 வயதுவரம்பு: 37-க்குள் இருக்க வேண்டும். பணி: Confidential Secretary காலியிடங்கள்: 1(PWD) தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Secretarial Practice-ல் இரண்டு ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000 வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். இதர பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: www.oil-india.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.11.2026 விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ.80 ஆயிரம் சம்பளத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗