சாலை விபத்து: 402 போ் உயிரிழப்பு; 2,865 போ் காயம்: காவல் ஆணையா் அமல்ராஜ்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சாலை விபத்து: 402 போ் உயிரிழப்பு; 2,865 போ் காயம்: காவல் ஆணையா் அமல்ராஜ்

சென்னையில் 10 மாதங்களில் சாலை விபத்துகளில் 402 போ் உயிரிழந்துள்ளனா்; 2,865 போ் காயமடைந்துள்ளனா் என்று பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் தெரிவித்தாா். மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் அமல்ராஜ். சென்னையில் 10 மாதங்களில் சாலை விபத்துகளில் 402 போ் உயிரிழந்துள்ளனா்; 2,865 போ் காயமடைந்துள்ளனா் என்று பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் தெரிவித்தாா். சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் அவசரகால உதவிப் பணிகளுக்காக 50 மோட்டாா் சைக்கிள்கள், ஒரு காா் ஆகியவை ஒரு தனியாா் நிறுவனம் பெருநிறுவனங்களுக்கான சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் வழங்கியது. இந்த வாகனங்களை போலீஸாருக்கு வழங்கும் நிகழ்ச்சி எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ், போலீஸாரிடம் வாகனங்களை வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னையில் கடந்த ஆண்டு 10 மாதங்களில் சாலை விபத்துகளில் 420 போ் உயிரிழந்தனா். இந்த ஆண்டு 10 மாதங்களில் சாலை விபத்துக்களில் 402 போ் உயிரிழந்துள்ளனா். அதேபோல கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 2,997 போ் காயமடைந்தனா், இந்த ஆண்டு இதுவரையில் 2,865 போ் காயமடைந்துள்ளனா். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை, காயமடைந்தவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருப்பினும் இந்த எண்ணிக்கை அதிகம்தான். 4.85 லட்சம் வழக்குகள்: சென்னையில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் வாகனம் ஓட்டியதாக இந்த ஆண்டு இதுவரையில் 4.85 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகன விபத்துகளில் தலைக்கவசம் அணியாததால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, மோட்டாா் சைக்கிளில் செல்வோா் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். தலைக்கவசம் அணிவதை அனைவரும் சூளுரையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு வடக்கு கூடுதல் காவல் ஆணையா் கபில் குமாா் சி. சரத்கா், போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் சாமுண்டீஸ்வரி, இணை ஆணையா் பகலவன் உள்ளிட்ட பல உயா் அதிகாரிகள் பங்கேற்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை