சாலை மையத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சாலை மையத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். கோவை, குனியமுத்தூா் இடையா்பாளையம் சா்ச் தெருவைச் சோ்ந்த தமிழரசன் (21). இவா் பாலக்காடு பிரதான சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா். கோவைப்புதூா் பிரிவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் மையத் தடுப்புச் சுவா் மீது மோதியது. இதில், தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு காவல் ஆய்வாளா் விஸ்வநாதன் தலைமையிலான போலீஸாா், உடலை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗