புதுக்கோட்டைக்கு செல்லும் வழியில் சாலையெங்கிலும் முதல்வர் விஜய்யை மக்கள் வரவேற்றது குறித்து... முதல்வரை வரவேற்ற மக்கள் - படம் - டிஐபிஆர் புதுக்கோட்டைக்கு செல்லும் முதல்வர் விஜய்யை சாலையின் இருபுறமும் இருந்த மக்கள் திங்கள்கிழமை (நவ. 2) வரவேற்றனர். புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் நடைபெறும் அரசு விழாவில், ரூ. 24.5 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம், ரூ. 4 கோடியில் கட்டப்பட்ட நவீன உள்விளையாட்டு அரங்கம் உள்பட மாவட்டத்தில் நிறைவடைந்த திட்டப் பணிகளை தொடக்கி வைப்பதற்காக முதல்வர் விஜய் புதுக்கோட்டை வருகிறார். இதற்காக, சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் முதல்வர் விஜய் திருச்சி வந்தடைந்தார். பின்னர், திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக சுமார் 55 கி.மீ தூரம் வாகனத்தில் செல்லும் முதல்வர் விஜய்யை சாலையின் இருபுறமும் திரண்ட மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேலும், பல இடங்களில் முதல்வர் விஜய்யின் வாகனத்தின் மீது மக்கள் மலர் தூவி வரவேற்றனர். இதனிடையே, புதுக்கோட்டையில் அரசு விழாவுக்காக தயார் செய்யப்பட்ட பிரம்மாண்ட அரங்கை விட்டுவிட்டு, ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கிலேயே விழாவை நடத்திட திடீர் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலையெங்கிலும் முதல்வரை வரவேற்ற மக்கள்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗