சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் முதல்முறை... கோமோ 1907 புதிய சாதனை!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் முதல்முறை... கோமோ 1907 புதிய சாதனை!

சாம்பியன்ஸ் லீக்கின் அறிமுக சீசனிலேயே புதிய வரலாறு படைத்த கோமோ 1907 அணி குறித்து... கோல் அடித்த மகிழ்ச்சியில் கோமோ 1907 அணியினர் - படம்: எக்ஸ் / கோமோ 1907 சாம்பியன்ஸ் லீக்கில் கோமோ 1907 முதல் அணியாக வெளியூர் மண்ணில் நடந்த போட்டியில் அதிக கோல்கள் (9) அடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் மிகப்பெரிய கால்பந்துத் தொடரான சாம்பியன்ஸ் லீக்கில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த கோமோ அணி இந்த சீசனில்தான் முதல்முறையாக பங்கேற்றுள்ளது. அறிமுக சீசனிலேயே கோமோ அணி பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது. நள்ளிரவு நடந்த போட்டியில் லென்ஸ் அணியுடன் கோமோ மோதியது. இந்தப் போட்டியில் கோமோ 9-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. இதில் கோமோ அணியின் டாசோஸ் டூவிகாஸ் 7, 32, 57ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து ஆட்ட நாயகன் விருது வென்றார். நிகோ பாஸ் 2 அசிஸ்ட், ஒரு கோல் (40’) அடித்தார். குன்யா (47’), கெம்ப் (53’), லிபரேலி (62’), படூரினா (69’), பாப்பாச்சியோலி (90+2’) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து வரலாற்று வெற்றிக்கு உதவினார்கள். சாம்பியன்ஸ் லீக் வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய வெற்றியாக இருக்கிறது. அத்துடன் வெளியூர் மண்ணில் அதிகபட்ச கோல் அடித்த அணியாகவும் கோமோ சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் ஸ்பெயினில் உயிரிழந்த ஜூசஸ் மிகைல் உருவப்படம் பதிந்த ஜெர்ஸியை தூக்கிப் பிடித்து கொண்டாடினார். 18 வயதான பாப்பாச்சியோலி சீரி ஏ போட்டியில்கூட விளையாடாமல் நேரடியாக சாம்பியன்ஸ் லீக்கில் பங்கேற்று கோல் அடித்துள்ளார். இந்த வெற்றியுடன் கோமோ அணி சாம்பியன்ஸ் லீக் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட், ஆர்செனல் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன. A historic night in Lens! â¹ï¸ pic.twitter.com/P1OqwQzZxh âªï¸ Lens 1-9 Como (2026) âªï¸ Real Madrid 8-0 Malmö (2015)âªï¸ Liverpool 8-0 BeÅiktaÅ (2007)Como making history ð#UCL pic.twitter.com/mSbmhcLpHG பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை