இத்தாலியில் உருவாகும் ஜெனரலி என்ற புதிய கால்பந்துத் திடல் குறித்து... ஜெனரலி என்ற புதிய கால்பந்துத் திடலின் மாதிரி படங்கள் - படங்கள்: எக்ஸ் / ஏசி மிலன் இத்தாலியில் சான் சிரோவில் நூறு ஆண்டுகள் பழமையான கால்பந்துத் திடல் இடிக்கப்பட்டு, அதே இடத்தில் ஜெனரலி என்ற புதிய திடல் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் இந்தத் திடலை ஏசி மிலன் அணியே பயன்படுத்தி வந்தது. பின்னர், இன்டர் மிலன் அணியும் சேர்ந்து இந்தத் திடலை பயன்படுத்தி வருகின்றது. வருங்காலத்திலும் இதே நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் மிலன் நகரில் சான் சிரோ மாவட்டத்தில் 1925ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 1926 டிசம்பரில் இந்தத் திடல் திறக்கப்பட்டது. இதனை 1935, 1955, 1987–1990, 2015–2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பித்தும் வந்தனர். இந்த நிலையில், ஃபிஃபா அறிவித்துள்ள நவீன பாதுகாப்பு வசதிகளைக் கருத்தில் கொண்டு புதிய திடல் உருவாக்கப்பட இருக்கிறது. முன்னதாக இந்தத் திடலில் 75,000- 80,000 வரைக்கும் பார்வையாளர்கள் அமரும்படி இருந்தது. புதிய திடலில் 71, 500 பேர் இருக்கைகள் அமைக்க திட்டமிட்டுள்ளார்கள். இந்தத் திடலை இத்தாலியின் கலாசாரத்தையும் மிகவும் புகழ்பெற்ற டௌமோ தேவாலயத்தின் பாணியிலும் உருவாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடலில் அதிகமான பார்க்கிங் வசதியுடன் உருவாக்கப்பட இருக்கிறது. 2028 முதல் இதற்கான பணிகள் துவங்கி, 2031/32ல் பயன்பாட்டுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. Un nuovo simbolo per Milano.Una nuova casa per le future generazioni di tifosi Interisti.âGenerali Stadium ðï¸ â pic.twitter.com/9wmNGfrVI9 Inspired by Milano's architectural heritage and designed for the future.Generali Stadium brings together design, innovation, and sustainability in one of the most ambitious projects ever envisioned for the city.@GENERALI pic.twitter.com/NYAS3eiTMT தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சான் சிரோவுக்குப் பதிலாக நவீன வசதியுடன் உருவாகும் ஜெனரலி திடல்..! என்னென்ன வசதிகள்?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗