சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

சென்னை: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க 8 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தவெக அரசின் 3-வது அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. வெளிநாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் சென்றுள்ள அமைச்சர்கள் அருண்ராஜ், டி.கே.பிரபு ஆகிய இருவர் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் புதிய தொழில் முதலீடுகள், முஸ்லிம் இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, தாழம்பூர் புறம்போக்கு நிலப் பிரச்சனை, வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 8 நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க அனுமதி, சமூகநீதி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைத்தல் போன்ற சில திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதிய தலைமைச் செயலகம், பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதுதவிர, அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக சில அறிவுறுத்தல்களை முதல்வர் விஜய் வழங்கியதாக கூறப்படுகிறது. ஊழலற்ற ஆட்சி, லஞ்சமற்ற நிர்வாகம் என்பதில் உறுதியுடன் இருப்பதுடன், டெண்டர் விவகாரங்களில் கவனமாக, வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். அமைச்சர்களுக்கு எச்சரிக்கை அமைச்சர்களின் பெயர்களைக் கூறி அவர்கள் உறவினர்கள், உதவியாளர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கிய அதிகாரிகள் யாரும் லஞ்சம், ஊழலில் ஈடுபடக் கூடாது. இத்தகைய செயல்கள் நடைபெறாமல் அமைச்சர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும், அதிகாரிகளின் பணியிட மாற்றங்களில் அமைச்சர்கள் தலை யிடக்கூடாது. அமைச்சர்கள் உட்பட அனைவரது செயல்பாடுகளும் கண்காணிக்கப்படும். அறிவுறுத்தல்களை மீறிச் செயல்பட்டால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல் குமார் கூறும்போது, ‘‘அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க 8 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு, சாதிவாரி கணக்கெடுப்புக்காக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் சமூகநீதி கணக்காய்வு ஆணையம் அமைக்கப்படும். அதன்மூலம் சாதிவாரி, சமூகப் பொருளாதார நிலை குறித்து அடுத்த ஆண்டு தமிழகம் முழுவதும் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்படும். முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு பிசி சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்” என்றார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை