சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு சிபிஎம் கட்சி வரவேற்புத் தெரிவித்துள்ளது. முதல்வர் விஜய் / மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு சிபிஎம் கட்சி வரவேற்புத் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வரவேற்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதேநேரம், இந்தப் பணியைத் தொடங்குவதற்கு முன்பு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு தமிழ்நாட்டில் சமூக நீதி ஆய்வை நடத்துவதென்றும், இதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய ஆணையம் அமைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் இக்கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. இந்தப் பின்னணியில் தமிழ்நாடு அமைச்சரவையின் இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே சமயம், இதன் ஆய்வு வரம்புகள் உள்ளிட்ட முழுமையான விபரங்கள் வெளியிடப்படுவது அவசியம் என்று சிபிஐ(எம்) வலியுறுத்துகிறது. இதன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமெனில் ஆணையம் தன் பணியைத் தொடங்குவதற்கு முன்பே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனைகளைப் பெற்றால் சமூக, பொருளாதார நிலைமைகளை முழுமையாக வெளிக்கொணரவும், அதனடிப்படையில் சமூக - பொருளியல் நீதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவும். எனவே, இதுகுறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக அரசின் முடிவுக்கு சிபிஎம் வரவேற்பு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗