வேலைவாய்ப்பு கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளி மாணவருக்கு ஒரே நாளில் முதல்வர் விஜய் பணி நியமன ஆணை வழங்கியதைப் பற்றி... முதல்வர் விஜய்யுடன் மாற்றுத்திறனாளி மாணவர் தினேஷ். வேலைவாய்ப்பு கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளி மாணவருக்கு முதல்வர் விஜய் ஒரே நாளில் பணி நியமன ஆணை வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார். சென்னை கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையவளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், தொழில்துறைக்கான நவீன மின் ஆய்வகங்களை முதல்வர் விஜய், புதன்கிழமை திறந்துவைத்தார். மாணவர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் விஜய் அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அப்போது மாற்றுத்திறனாளி இளைஞரான வீ. தினேஷ் வேலைவாய்ப்பு கோரி முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார். மாற்றுத்திறனாளி மாணவர் அளித்த மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் விஜய், அந்த மனுவை தனது கோட் பாக்கெட்டில் பத்திரமாக வைத்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. முதல்வர் விஜய்யிடம் தனது கோரிக்கை மனுவை நேரில் வழங்கிய மாற்றுத்திறனாளி மாணவரான தினேஷ், தன்னால் பேச முடியாது என்று சைகை மொழியில் கூறினார். இதனை புரிந்துக்கொண்ட முதல்வர் விஜய் உடனடியாக அந்த மனுவை கனிவுடன் பெற்று நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தார். இந்த நிலையில், நேற்று காலை வைத்த கோரிக்கைக்கு உடனே நடவடிக்கை எடுத்துள்ள முதல்வர் விஜய், அந்த மனுவை பரிசீலனை செய்து, இன்று அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக, திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவியாளர் பணிக்கான ஆணையை வழங்கியுள்ளார். மாற்றுத்திறனாளி மாணவர் தினேஷின் கோரிக்கைக்கு முதல்வர் விஜய் ஒரே நாளில் உடனடி நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. ð¨ BREAKING NEWS !à®à®°à¯ நாளில௠à®à¯à®°à®¿à®à¯à®à¯ மனà¯â¦ à®à®à¯à®¤à¯à®¤ நாள௠à®à®°à®à¯ வà¯à®²à¯!மாறà¯à®±à¯à®¤à¯à®¤à®¿à®±à®©à®¾à®³à®¿ à®à®³à¯à®à®°à¯ தினà¯à®·à®¿à®©à¯ à®à¯à®°à®¿à®à¯à®à¯à®à¯à®à¯ à®à®à®©à®à®¿ நà®à®µà®à®¿à®à¯à®à¯ à®à®à¯à®¤à¯à®¤ à®®à¯à®¤à®²à¯à®µà®°à¯ விà®à®¯à¯!மனிதநà¯à®¯à®¤à¯à®¤à¯à®à®©à¯ à®à¯à®¯à®²à¯à®ªà®à¯à® à®®à¯à®¤à®²à¯à®µà®°à¯ திரà¯à®µà¯à®±à¯à®±à®¿à®¯à¯à®°à¯ à®à®°à®à¯ தà¯à®´à®¿à®±à¯à®ªà®¯à®¿à®±à¯à®à®¿ நிலà¯à®¯à®¤à¯à®¤à®¿à®²à¯ பணி நியமன à®à®£à¯ வழà®à¯à®à®²à¯!⦠#BREAKING | à®à®°à¯ நாளில௠மனà¯â¦ à®à®à¯à®¤à¯à®¤ நாள௠பணி நியமன à®à®£à¯!! ð¨à®®à®¾à®±à¯à®±à¯à®¤à¯à®¤à®¿à®±à®©à®¾à®³à®¿ à®à®³à¯à®à®°à¯ தினà¯à®·à®¿à®©à¯ à®à¯à®°à®¿à®à¯à®à¯à®¯à¯ à®à®±à¯à®±à¯ à®à®à®©à®à®¿ நà®à®µà®à®¿à®à¯à®à¯ à®à®à¯à®¤à¯à®¤ à®®à¯à®¤à®²à¯à®µà®°à¯ விà®à®¯à¯.திரà¯à®µà¯à®±à¯à®±à®¿à®¯à¯à®°à¯ à®à®°à®à¯ தà¯à®´à®¿à®±à¯à®ªà®¯à®¿à®±à¯à®à®¿ நிலà¯à®¯à®¤à¯à®¤à®¿à®²à¯ பணி நியமன à®à®£à¯ வழà®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯. pic.twitter.com/whlzWqAMSN Chief Minister Vijay surprised a differently-abled student, who had submitted a petition seeking employment, by issuing an appointment order on the very same day. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
சைகை மொழியில் கோரிக்கை.. ஒரே நாளில் பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗