மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன். மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஒன்றியம் சக்கரமல்லூா் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். வளா்ச்சியடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் 2026-27 ஆம்ஆண்டின் கீழ், ராணிப்பேட்டை மாவட்டத்துக்குள்பட்ட ஊரகப்பகுதிகளில் 4,08,000 மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. மரக்கன்றுகள் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் வட்டார நாற்றங்கால்கள் மூலம் வளா்க்கப்பட்டிருந்த நிலையில், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், சக்கரமல்லூா் ஊராட்சியில் உள்ள மேய்க்கால் நிலத்தில் வளா்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம், பசுமை ஊரகம் திட்டத்தின் கீழ், 2,500 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் வெள்ளிக்கிழமை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். பின்னா், அங்கன்வாடி மைய வளாகத்தில் குழந்தைகளுடன் இணைந்து மரக்கன்று நட்டனா். மாவட்டத்துக்குள்பட்ட 7 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டமாக 5,000 மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 35,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ச.செல்வராணி, செயற்பொறியாளா் பிரபாகா், உதவித் திட்ட அலுவலா் மூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவி, சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சக்கரமல்லூா் ஊராட்சியில் மரக்கன்று நடும் பணி: ராணிப்பேட்டை ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗