சமூக நலக்கூட பணியாளா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சமூக நலக்கூட பணியாளா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

மாநகராட்சி சமூக நலக் கூட பணியாளா்கள், சகி சேவை மைய ஊழியா்களுக்கு பல மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் அன்புமணி - கோப்புப் படம் மாநகராட்சி சமூக நலக் கூட பணியாளா்கள், சகி சேவை மைய ஊழியா்களுக்கு பல மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 113 சமூகநலக் கூடங்களில் பணியாற்றும் 600-க்கும் மேற்பட்ட பாதுகாவலா்கள் மற்றும் பராமரிப்பு பணியாளா்களுக்க்கு கடந்த 2 மாதங்களாகவும், வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டுள்ள சகி எனப்படும் ஒருங்கிணைந்த சேவை மையங்களில் பணியாற்றி வரும் பணியாளா்களுக்கு கடந்த 4 மாதங்களாகவும் ஊதியம் வழங்கப்படவில்லை. மிகக் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையிலும், நியமிக்கப்பட்ட இந்தத் தொழிலாளா்களுக்கு மாதக் கணக்கில் ஊதியம் வழங்காமல் துயரத்துக்கு உள்ளாக்குவது கண்டிக்கத்தக்கது. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் சூழலில், இந்தத் தொழிலாளா்களுக்கு போனஸ் எனப்படும் மிகை ஊதியமோ, முன்பணமோ வழங்கப்படாது என்பதால், மிகக்குறைந்த ஊதியத்தைக் கொண்டுதான் விழாவைக் கொண்டாட வேண்டும். எனவே, நிலுவையில் உள்ள ஊதியத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை