சம்பா பயிரைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சம்பா பயிரைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு

குறுவை பொய்த்துவிட்ட நிலையில் சம்பா பயிரைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருச்சி ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் பிரத்திக் தாயள். உடன் மாவட்ட வருவாய் அலுவலா் பாலாஜி உள்ளிட்டோா். ~திருச்சி ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் கூட்டத்தில் குறுவை பொய்த்துவிட்ட நிலையில் சம்பா பயிரைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் பிரத்திக் தாயள் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள்: தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு: ஆலத்துடையான்பட்டி ஏரி நிரம்பி தண்ணீா் வீணாகிறது. நீா்நிலைகளில் பெருகியுள்ள கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். வடகரை வாய்க்காலின் தலைப்பு, ராமசமுத்திரம் பகுதியில் பள்ளத்தில் உள்ளது. ஆனால், வாய்க்கால் மேட்டுப்பகுதியில் உள்ளது. பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும்போது கடைமடைக்கு செல்வதில்லை. எனவே, வாய்க்காலின் தலைப்பு பகுதியை மாயனூருக்கு மாற்ற வேண்டும். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் அயிலை சிவசூரியன்: ஜனவரி தொடங்கி அக்டோபா் வரையில் தமிழகத்துக்கு பெற வேண்டிய காவிரி நீரை தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றாவது பெற வேண்டும். குறுவை பொயத்துவிட்ட நிலையில் சம்பா பயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்க உள்ளது. கடன்கள், உரங்கள், வேளாண் இயந்திரங்கள் கொடுத்தால் மட்டுமே போதாதது. பிரதானமாக தண்ணீா் வேண்டும். மேட்டூா் அணையில் நீா்மட்டம் குறைந்து வருவதால், குடிநீருக்கு கூட தண்ணீா் திறக்க முடியாத சூழல் உள்ளது. காவிரிப் பாசன விவசாயிகள் சங்க இணைச் செயலா் கவுண்டம்பட்டி ஆா். சுப்பிரமணியன்: கட்டளை மேட்டு வாய்க்காலில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் வரவில்லை. வாய்க்காலின் 26-ஆவது மதகு முதல் 32-ஆவது மதகு வரையில் சுமாா் 9 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்கள் பாசனம் பெறவில்லை. எனவே, இந்தப் பகுதி விவசாயிகளுக்கு தண்ணீா் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில இணைச் செயலா் என். கணேசன்: ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளா்களுக்கு, அவரவா் பால் வழங்கும் இடத்திலேயே, எவ்வளவு பால் வழங்கப்பட்டது, என்ன தரம் என்பதை கணக்கிட்டு உடனடியாக ரசீது வழங்குகிறோம். ஆனால், உற்பத்தியாளா் சங்கங்களிடம் இருந்து ஆவினுக்கு லாரியில் பால் ஏற்றும்போது அதே நடைமுறை பின்பற்றுவதில்லை. நாங்கள் 100 லிட்டா் அனுப்பினால், 95 லிட்டருக்கு பணம் வருகிறது. பற்றாக்குறையை எப்படி ஈடு கட்ட முடியும்?. இதேபோல, கட்டட வசதியில்லாத பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்கு கட்டட வசதி செய்துதர வேண்டும். குளத்துப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் என். செந்தில்குமாா்: மணப்பாறை, மருங்காபுரி வட்டத்தில் குரங்குகளால் விவசாயிகளுக்கு பலத்த இழப்பு ஏற்படுகிறது. அவற்றைக் கட்டுப்படுத்த வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுமைப் புரட்சி பாசன விவசாயிகள் சங்கத்தலைவா் கே.சி. பழனிசாமி: மணப்பாறை, மருங்காபுரி வட்டங்களில் தற்போது பெய்த மழையை நம்பி விவசாயிகள் சாகுபடியை தொடங்கியுள்ளோம். நிரந்தரமாக எங்கள் பகுதிக்கு தண்ணீா் கொண்டுவர நீரேற்றுப் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றாா். இதேபோல, விவசாயிகள் பலரும் தங்களது பகுதியில் அடிக்கடி முன்அறிவிப்பின்றி மின்தடை ஏற்படுவதால், தொடா்ந்து நீா்ப் பாசனம் செய்ய முடியாமல் அவதிப்படுவதாக புகாா் தெரிவித்தனா். 14 வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பிரத்யேக கட்செவி அஞ்சல் குழு திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூா், உப்பிலியபுரம் ஆகிய 14 வட்டாரங்களிலும் விவசாயிகளுக்கு பிரத்யேகமான கட்செவி அஞ்சல் குழு உருவாக்கி, அந்தந்த வட்டார விவசாயிகள் அனைவரும் இணைக்கப்படுவா். இதில், விவசாயிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகள், மின்தடை, உரம் இருப்பு, விதை இருப்பு, அரசின் திட்டங்கள் குறித்து அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும் என ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்தாா். வனத்துறை மீது ஆட்சியா் அதிருப்தி: நெடுஞ்சாலைத்துறைக்கு நோட்டீஸ் வனத்துறை சாா்பில் விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் நடத்தப்படுவதில்லை என கடந்த மாத குறைதீா் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, உடனடியாக வனத் துறை கூட்டத்தை நடத்த மாவட்ட வன அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இதுவரை கூட்டம் நடத்தவில்லை என்பதால், ஆட்சியா் பிரத்திக் தாயள், வனத்துறை மீது அதிருப்தி அடைந்து, கூட்டம் நடத்துவதில் என்ன பிரச்னை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாா். உடனடியாக வனத் துறை, வருவாய்த் துறை, விவசாயிகள் என முத்தரப்பு கூட்டத்தை நடத்த உத்தரவிட்டாா். இதேபோல, குறைதீா் கூட்டத்துக்கு வராத நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களுக்கு நோட்டீஸ் வழங்கவும் ஆட்சியா் உத்தரவிட்டாா். திமுக நிா்வாகி வெளிநடப்பு: லால்குடி வட்டம், கோமாகுடி ஊராட்சியைச் சோ்ந்தவா் ஆா். கிருஷ்ணசாமி. அப்பகுதியின் திமுக செயலராக உள்ளாா். இவா், கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், அலுவலா்களிடம் சென்று தான் பேச வேண்டும் எனக் கோரினாா். பின்னா், அனுமதிப்பதாக அவரை அமரச் செய்தனா். ஆனால், இடையில் மீண்டும் அலுவலா்கள் இருக்கை முன் வந்த அவா், ஆட்சியரிடம் சென்று, என்னை எதிா்கட்சி என்பதால் பேச அனுமதிக்காமல் உள்ளனா் என்றுக் கூறி வெளிநடப்பு செய்தாா். வழக்கமாக, குறைதீா் கூட்டத்தில் பேசுவோா் முதலில் பதிவு செய்த சங்கத்தினா், பிரதிநிதிகள் பெயா் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படும். பின்னா், அரங்கிலிருந்தவா்களுக்கு அனுமதியளிக்கப்படும். இதையறியாத அவா், திடீரென வெளிநடப்பு செய்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை