சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி அஞ்சலி

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி அஞ்சலி

குஜராத் மாநிலம், ஆமதாபாத் கேவாடியாவில் உள்ள 597 அடி உயர சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தியது குறித்து... குஜராத் மாநிலம், ஆமதாபாத் கேவாடியாவில் உள்ள 597 அடி உயர சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி. - டிஎன்எஸ் ஆமதாபாத்: சர்தார் வல்லபாய் படேலின் 151 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, குஜராத் மாநிலம், ஆமதாபாத் கேவாடியாவில் உள்ள 597 அடி உயர சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு, பிரதமர் மோடி சனிக்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தினார். குஜராத்தின் ஏக்தா நகரில், ரூ.400 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இதில் கழிவுநீர் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம், கட்டட முகப்பு அலங்கார விளக்குகள் மற்றும் 'ரெயின் ஃபாரஸ்ட்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அடங்கும். இன்று, குஜராத் பயணத்தின் இரண்டாம் மற்றும் இறுதி நாளில், ஏக்தா நகரில் உள்ள 'ஒற்றுமைச் சிலையில்', இந்தியாவின் 'இரும்பு மனிதர்' சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நாடு முழுவதும் 'தேசிய ஒற்றுமை நாள்' என்று கொண்டாடப்படும் சர்தார் படேலின் 151-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் தலைமை தாங்கினார். அப்போது, ​​இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள், உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலையின் மீது மலர் தூவி சிறப்பான அஞ்சலியைச் செலுத்தியது. உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலையின் மீது மலர் தூவி சிறப்பான அஞ்சலியைச் செலுத்திய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் தேசக் கட்டமைப்பில் சர்தார் படேலின் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர் மோடி, நாட்டின் சேவைக்காக சர்தார் படேல் செய்த தியாகமும், அவர் காட்டிய அர்ப்பணிப்பு உணர்வும், வளர்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதற்கு ஒரு சிறந்த ஊக்கமளிக்கும் சக்தியாகத் திகழ்கின்றன என்று பிரதமர் கூறினார். 'அகண்ட பாரத'த்தின் சிற்பியும், இந்தியாவின் 'இரும்பு மனிதரு'மான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில், அவருக்கு எனது மனமார்ந்த அஞ்சலி. வலிமையான, வளமான மற்றும் திறன்மிக்க இந்தியாவை உருவாக்குவதற்காக அவர் தனது வாழ்வையே அர்ப்பணித்தார். பாரத மாதாவிற்கு அவர் ஆற்றிய சேவையில் வெளிப்பட்ட தியாகமும் அர்ப்பணிப்பும், வளர்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு பெரும் ஊற்றுக்கோளாகத் திகழ்கின்றன" என்று பிரதமர் மோடி தெரிவித்தார். தேசிய ஒற்றுமை நாள் நவம்பா் 15-ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்று மாலை, 'தேசிய ஒற்றுமை நாள்' கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். முன்னதாக, வெள்ளிக்கிழமை ஏக்தா நகரில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 'பாரத திருவிழா 2026' நிகழ்ச்சியை பிரதமர் மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். நவம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் திருவிழா, 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' உணா்வை பிரதிபலிக்கும் வகையில், நாட்டின் கலாசார பன்முகத்தன்மை, பாரம்பரியங்கள், உணவு வகைகள், கைவினைப் பொருள்கள் மற்றும் கலாசாரச் சொத்துகளைக் கொண்டாடுகிறது. இது பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கலாசாரம், சுற்றுலா தலங்களின் சிறப்புகள் இந்த விழாவில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. சர்தார் படேல் 1875 அக்டோபர் 31-ஆம் தேதி குஜராத்தின் நாடியாத் பகுதியில் பிறந்தார். அவர் 1950 டிசம்பர் 15-ஆம் தேதி காலமானார். 1947-இல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நாட்டின் முதல் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற படேல், 560-க்கும் மேற்பட்ட மன்னராட்சி சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கிய பெருமைக்குரியவர். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பைப் பேணுவதிலும் வலுப்படுத்துவதிலும் உள்ள உறுதிப்பாட்டை வளர்க்கவும், நிலைநிறுத்தவும், 2014-ஆம் ஆண்டு முதல் மோடி தலைமையிலான அரசு அக்டோபர் 31-ஆம் தேதியை 'தேசிய ஒற்றுமை நாளாக' கடைப்பிடித்து வருகிறது. ஒற்றுமைக்கான சிலையாக கருதப்படும் வல்லபாய் படேல் சிலை 182 மீட்டர் உயரம் கொண்டது. சீனாவில் உள்ள ஸ்பிரிங் டெம்பிள் புத்தர் சிலை 153 மீட்டர் உயரம் கொண்டதாகும். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை