சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ககிசோ ரபாடா - படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்) சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை வீழ்த்திய வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா, இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணிக்காக 600 விக்கெட்டுகள் வீழ்த்திய 5-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். 350 Test Wickets For Rabada! ð¤Another monumental milestone for one of South Africaâs finest! ð¿ð¦Kagiso Rabada reaches the incredible 350-wicket mark in Test cricket, further cementing his place among the very best to wear the badge! ðA relentless competitor, a world-class⦠pic.twitter.com/zf1ZDOHngQ அதுமட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகளைக் கடந்தும் ரபாடா சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ரபாடா மூன்றாவது இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளைக் கடந்துள்ள ஷான் பொல்லக், டேல் ஸ்டெயின், மாக்யா நிட்னி மற்றும் ஆலன் டொனால்டு வரிசையில் ககிசோ ரபாடாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சர்வதேச கிரிக்கெட்டில் ககிசோ ரபாடா புதிய சாதனை!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗