சௌதி அரேபியாவில் ஹௌதி அமைப்பு தாக்குதலால் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தது குறித்து... சௌதியில் தாக்குதல் - கோப்புப் படம் சௌதி அரேபியாவில் ஹௌதி அமைப்பு தாக்குதலை தீவிரப்படுத்தியதால் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தது. யேமனில் சனா உள்ளிட்ட பெரும் பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் ஹௌதி கிளா்ச்சியாளா்கள் வைத்துள்ளனா். அவா்களை ஈரான் ஆதரிக்கிறது. ஹௌதி கிளா்ச்சியாளா்களுக்கு எதிராகச் செயல்படும் ஆயுதக் குழுக்களை சௌதி அரேபியா உள்ளிட்ட பிற மேற்காசிய நாடுகள் ஆதரிக்கின்றன. ஈரான் - சௌதி அரேபியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வரும்நிலையில், சௌதி அரேபியாவில் ஈரான் ஆதரவு ஹௌதி அமைப்பும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்காசிய பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்றும் சௌதி அரேபியா மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். சௌதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையமான ராஸ் தனுரா, ராபிக் சுத்திகரிப்பு நிலையம், அராம்கோ நிறுவனங்கள் மீதும், கிங் கலீத் சர்வதேச விமான நிலையம், கிங் பகத் சர்வதேச விமான நிலையம் மற்றும் ராணுவ தளவாடங்கள் மீது ஹௌதி தாக்குதல் நடத்தியது. சௌதி அரேபியா மீது ஹௌதி அமைப்பு தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில், கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்தது. பிரன்ட் கச்சா எண்ணெய்யின் விலை, பீப்பாய்க்கு 0.75 சதவிகிதம் உயர்ந்து 115.74 டாலராக அதிகரித்தது. மேலும், அமெரிக்க கச்சா எண்ணெய்யின் (வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்) விலையும் 0.71 சதவிகிதம் உயர்ந்து, 102.72 டாலராக அதிகரித்தது. கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, முதன்முறையாக அமெரிக்க கச்சா எண்ணெய்யின் விலை 100 டாலரை கடந்துள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சௌதியில் ஹௌதி தாக்குதல்! கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗