அமராவதி: 21 வயது நிரம்பிய இளைஞர் அரசு பள்ளிக்குள் நுழைந்து 10ம் வகுப்பு மாணவியின் முகத்தை 'செயின்ஷா' என அழைக்கப்படும் மின்சார ரம்பம் கொண்டு வெட்டிய கொடூர சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. ஆந்திராவில் நடந்த இந்த சம்பவத்தின் திடுக்கிட வைக்கும் சம்பவத்தின் பின்னணி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ராப்தாடு மண்டலில் உள்ள மாவட்ட பரிஷன் உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கோபிகா என்ற மாணவி 10ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலையில் பள்ளிக்குள் 21 வயது இளைஞர் நுழைந்தார். அந்த நபர் தனது கையில் 'செயின்ஷா' என அழைக்கப்படும் மின்சார ரம்பத்தை கொண்டு சென்றார். கோபிகாவின் வகுப்பிற்குள் சென்ற இளைஞர் அவரது முகத்தை வெட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அலறினர். ஆனால் அந்த இளைஞர் அசரவில்லை. மாணவி கோபிகாவின் முகத்தை வெட்டி கொண்டே இருந்தார். லட்சுமி என்ற மாணவி கோபிகாவை காப்பாற்ற முயன்றார். அவரும் காயமடைந்தார். இதையடுத்து அந்த நபர் 'செயின்ஷா' இயந்திரத்தை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டார். மாணவி கோபிகா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதையடுத்து பிற மாணவர்கள், ஆசிரியர் மாணவியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர செயலை செய்த 21 வயது இளைஞர் தப்பியோடியதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காதலை மாணவி நிராகரித்ததால் அந்த இளைஞர் ஆத்திரமடைந்து மாணவியை கொல்ல முயன்று இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. 10ம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து 'செயின்ஷா' எனும் மரம் அறுக்கும் மின்சார ரம்பத்தால் அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் ஆந்திரா மட்டுமின்றி மொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது.
பள்ளிக்குள் 10ம் வகுப்பு மாணவியை மின்சார ரம்பத்தால் வெட்டிய இளைஞர்.. காதலிக்க மறுத்ததால் கொடூரம்?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: oneindia.com (original report) ↗