ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் மரம் அறுக்கும் மின்சார ரம்பத்தால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். தாக்குதல் நடைபெற்ற பள்ளி வகுப்பறை ஆந்திரப் பிரதேசத்தில் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி மரம் அறுக்கும் ரம்பத்தால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ராப்தாடு ஜே.பி. அரசு உயர்நிலைப் பள்ளிக்குள் இன்று காலை பாடவேளையில், ஹேமந்த் என்ற 21 வயது இளைஞர் மரம் அறுக்கும் மின்சார ரம்பத்துடன் நுழைந்தார். பத்தாம் வகுப்பு அறைக்குள் நுழைந்த அந்த நபர், அங்கிருந்த மாணவி கோபிகாவை மின்சார ரம்பத்தால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில், மாணவி ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்த நிலையில், அவரைக் காப்பாற்ற முயன்ற சக மாணவி லட்சுமியும் தாக்கப்பட்டார். இதில், மாணவிகள் இருவரும் மிகக் கடுமையாகக் காயமடைந்தனர். ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட இரு மாணவிகளும் அவசர சிகிச்சைக்காக அனந்தபூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மாணவி கோபிகா பலியான நிலையில் உள்ளதால், மற்றொரு மாணவி மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய ஹேமந்த் பள்ளியில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹேமந்த், மாணவி கோபிகாவின் தூரத்து உறவினர் என்று கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தாக்குதலை நேரில் கண்ட மாணவர்கள் பலரும் கதறி அழும் காணொலிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. தாக்குதலுக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பற்றி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சமூக ஊடகப் பதிவில், "அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் இருந்த பத்தாம் வகுப்பு மாணவி மீது நடத்தப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்னை மிகுந்த அதிர்ச்சிக்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. பள்ளிகளுக்குள் நுழைந்து நமது மாணவிகளைத் தாக்கும் நபர்களுக்கு நம் சமூகத்தில் இடமில்லை. அந்த மாணவியின் உடல்நிலை விவரங்களை நான் நேரடியாகக் கண்காணித்து வருகிறேன். அவருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சையை முன்னுரிமை அடிப்படையில் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்தச் கொடூரச் செயலை செய்த நபரைத் தேடிக் கண்டுபிடித்து, அவருக்கு சட்டப்படி மிகக் கடுமையான தண்டனையை விரைவாக வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
பள்ளிக்குள் புகுந்து மரம் அறுக்கும் மின்சார ரம்பத்தால் 10 ஆம் வகுப்பு மாணவி கொடூரக் கொலை!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗