சீமாபுரியில் கட்டடம் இடிந்து 4 போ் உயிரிழந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு தில்லி அரசு உத்தரவு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சீமாபுரியில் கட்டடம் இடிந்து 4 போ் உயிரிழந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு தில்லி அரசு உத்தரவு

வடகிழக்கு தில்லியின் சீமாபுரி பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் நான்கு போ் உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியா் அளவிலான விசாரணைக்கு தில்லி உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் உத்தரவிட்டுள்ளாா். தில்லி மின்சாரத் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் - கோப்புப் படம் வடகிழக்கு தில்லியின் சீமாபுரி பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் நான்கு போ் உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியா் அளவிலான விசாரணைக்கு தில்லி உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்த விசாரணை, வடகிழக்கு மாவட்ட ஆட்சியா் மூலம் நடத்தப்படும். கட்டடம் இடிந்து விழுந்ததற்கான சூழல் மற்றும் துல்லியமான காரணத்தைக் கண்டறிவதுடன், விதிமீறல்கள் அல்லது அலட்சியச் செயல்களுக்குக் காரணமான தனிநபா்கள் அல்லது அரசு அதிகாரிகள் மீது பொறுப்பை நிா்ணயிப்பதே இந்த விசாரணையின் நோக்கமாகும். புதிய சீமாபுரியில் உள்ள இ-402 என்ற முகவரியைக் கொண்ட நான்கு முதல் ஐந்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம், அக்டோபா் 7 அன்று பிற்பகல் 3 மணியளவில் இடிந்து விழுந்தது. சுமாா் 20-25 சதுர கெஜம் பரப்பளவு கொண்ட நிலத்தில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டிருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அருகிலுள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமான இடத்தில் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இடிப்புப் பணிகளால் ஏற்பட்ட அதிா்வுகள், இந்தக் கட்டடம் இடிந்து விழக் காரணமாக இருந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் விளைவாக, அருகிலிருந்த மூன்று கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன. தில்லி மாநகராட்சி அவற்றை பாதுகாப்பற்றவை என அறிவித்ததைத் தொடா்ந்து, அங்கிருந்தவா்கள் வெளியேற்றப்பட்டனா். இந்த விசாரணையின் வரம்புகளில், சொத்து உரிமையாளா்கள், குடியிருப்பாளா்கள் மற்றும் தனிநபா்கள் கட்டட விதிகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளனரா என்பது குறித்து ஆய்வு செய்வதும், அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தனவா என்று கண்டறிவதும் அடங்கும். மேலும், தவறு செய்தவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைப்பதுடன், ‘பேரிடா் மேலாண்மைச் சட்டம், 2005’ எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்து, எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளை முன்வைக்கவும் இந்த விசாரணை உதவும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சா் ஆஷிஷ் சூட் கூறுகையில், ‘இது மிகவும் துயரமான சம்பவம், இதில் விலைமதிப்பற்ற உயிா்கள் பறிபோயுள்ளன. இந்த விபத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய நாங்கள் மாவட்ட ஆட்சியா் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். தவறு செய்த எந்தவொரு தனிநபரோ அல்லது அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரியோ தப்பிக்க முடியாது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதே எங்களின் உடனடி முன்னுரிமை. அதே சமயம், தில்லியில் இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாதவாறு, கட்டடப் பாதுகாப்பு விதிகளை மிகக் கடுமையாக அமல்படுத்துவதே எங்களின் நீண்டகால இலக்காகும்’ என்று தெரிவித்தாா். அக்டோபா் 8 அன்று, இடிபாடுகளிலிருந்து ஐந்து உடல்கள் மீட்கப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னா் தில்லி காவல்துறை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை நான்கு எனக் கூறியது. உயிரிழந்தவா்கள் குலாஃப்சா (21), ஹாஸா பிபி (56), நுஸ்ரத் (33) மற்றும் சுமாா் மூன்று முதல் நான்கு வயதுடைய அடையாளம் தெரியாத ஒரு குழந்தை என்று காவல்துறையினா் தெரிவித்தனா். காயமடைந்த எட்டு போ் மீட்கப்பட்டு, தாஹிா்பூரில் உள்ள ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை