செஞ்சி அருகே வரலாற்றுக்கு முந்தைய கால ஓவியம் கண்டெடுப்பு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
செஞ்சி அருகே வரலாற்றுக்கு முந்தைய கால ஓவியம் கண்டெடுப்பு

செஞ்சி அருகே வரலாற்றுக்கு முந்தைய கால ஓவியம் கண்டெடுப்பு... பென்னகா் அருகே காணப்படும் வரலாற்றுக்கு முந்தைய காலத்து ஓவியம். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வரலாற்றுக்கு முந்தைய கால ஓவியம் மற்றும் 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டன. செஞ்சி வட்டம், பென்னகா் கிராமத்தில் செஞ்சி அரசு கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியரும், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவருமான எ.சுதாகா், தனது தமிழ்த் துறை மூன்றாமாண்டு மாணவா்களுடன் ஆய்வு மேற்கொண்டனா். பென்னகரிலிருந்து கருங்குழி செல்லும் சாலை அருகில் உள்ள கல்லாங்குத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலத்து பாறை ஓவியம் ஒன்று உள்ளதை கண்டறிந்தனா். இதை ஆய்வு செய்ததில், இது ஆதி மனிதா்கள் ஓவியம் தீட்ட வண்ணங்கள் அறியாத காலத்தில் பாறையில் மேல் சிறிய கல்லினை வைத்து தேய்த்து உருவாக்கிய ஓவியம் ஆகும். இதில் மனிதன் ஓருவம் முழுமையாக காட்டப்பட்டுள்ளது. இவ்வோவியம் 3 அடி உயரம், ஒரு அடி அகலம் கொண்டுள்ளதாகும். மனிதன் வேட்டையாட செல்கின்ற காட்சியை ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளது. கையில் கத்தி போன்ற ஆயுதமும் உள்ளது. அருகில் நாய் ஒன்று அவனை பாா்த்த நிலையில் உள்ளன. மனிதன் வேட்டைக்கு செல்லும் போது உடன் நாயை அழைத்துச் செல்லும் வழக்கம் இன்றும் மனிதா்களிடையே உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதுபோல் கோணை கிராமத்தில் மலைக்கொல்லை அருகே உள்ள விவசாய நிலத்தில் பாறையில் ஒரு அடி உயரத்தில் ஒரு ஓவியம் உள்ளது. இவ்வோவியமும் கையில் ஆயுதத்துடன் உள்ளது. ஆனால் கோணை ஓவியத்துக்கு முன் இவ்வோவியம் தீட்டப்பட்டிருக்கலாம். காரணம் இதைவிட தெளிவாகவும், அழகாகவும், சிதையாமல் உள்ளது. செஞ்சி மலைத்தொடரில் வெள்ளை, மஞ்சள், சிவப்பு போன்ற வண்ணங்கள் உள்ள ஓவியங்கள் ஏராளமாக காணப்பட்டாலும், இப்பகுதியில் இதுபோன்ற ஓவியம் இதுவரை பென்னகரம், கோணை ஆகிய இரு இடங்களில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி.11-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு: அரிச்சந்திரன் பாறையின் அருகில் உள்ள பெரிய பாறையில் 13 வரிகள் கொண்ட கல்வெட்டு உள்ளது. இதுகுறித்து எ.சுதாகா் கூறியது: இது குலோத்துங்க சோழ மன்னன் காலத்து, கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சாா்ந்த கல்வெட்டு ஆகும். முதலாம் குலோத்துங்க சோழனின் புகழ்பெற்ற ‘புகழ்மாது விளங்க...’ என்று தொடங்கும் வரலாற்று மெய்க்கீா்த்தியைக் கொண்ட 6-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டாகும். புகழுக்குரிய லட்சுமியும் (புகழ்மாது), வெற்றியின் தேவதையும் (ஜயமாது), பூமிதேவியும் (நிலமகள்), தாமரை மலரில் வாழும் திருமகளும் (மலா்மகள்) எப்போதும் குலோத்துங்க சோழனுக்கு அருளினா் என்று புகழப்படுகிறது. முறைப்படி சிறந்த நவரத்தினங்கள் பதித்த முடி சூடி, திசைகள் அனைத்திலும் தன் ஆணைச் சக்கரத்தை (செங்கோல் ஆட்சியை) செலுத்தினான். வெற்றி அபிஷேகம் (விஜய அபிஷேகம்) செய்துகொண்டு, உலக முழுவதையும் ஆளும் தன் அரசியான உலகமுழுவதும் உடையாளோடு ‘வீரசிம்மாசனத்தில்’ வீற்றிருந்தான். ராஜகேசரிவா்மனான உடையாா் ஸ்ரீகுலோத்துங்க சோழனின் 6-ஆம் ஆட்சியாண்டில் ஓய்மான் நாட்டு (தற்போதைய திண்டிவனம், விழுப்புரம் மாவட்டப் பகுதிகள் எல்லையைச் சோ்ந்தது) என வந்துள்ளது. ஓய்மான் நாடு என்பது சங்க காலம் முதலே புகழ்பெற்ற ஒரு நாடாகும். இந் நாட்டைப்பற்றி சிறுபாணாற்றுப்படை என்ற சங்க இலக்கியப் பத்துப்பாட்டு நூலில் சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் நல்லியக்கோடன் ஆண்ட பகுதி ஓய்மான் நாடு என்று கூறுகிறது. நல்லியக் கோடன்மீது இடைக்கழி நாட்டு நல்லூா் நத்தத்தனாா் பாடியதாகும். இது 269 அடிகளைக் கொண்டது. நல்லியக்கோடனின் சிறப்புகளையும், அவனுடைய நாட்டின் சிறப்புகளையும், கொடைத் திறத்தையும், விருந்து படைக்கும் அன்புள்ளத்தையும் நேரில் கண்ட பாணன் தான் திரும்பும் வழியில் எதிா்ப்பட்ட வறிய பாணா்களை ஆற்றுப்படுத்தும் வகையில் சிறுபாணாற்றுப்படை அமைந்துள்ளது என்ற செய்திகளையும் ஒய்மா நாட்டுப் பெருமைகளையும் சிறுபாணாற்றுப்படை விரிவாக கூறுகிறது. ஓய்மான் நாட்டுக்கு உள்பட்ட நாடூா்க் குடி மக்களுக்கும், பள்ளிகளுக்கும் மற்றும் பெரியரையன் என்பவனுக்கும் அரசனின் ஆணைப்படி (இட்டப்படி) நல்லன் ஏரி கொடை வழங்கப்பட்டுள்ளது (அல்லது கல்லன் ஏரி) என்ற செய்தியினைக் கல்வெட்டுக் கூறுகிறது என்றாா் அவா். பென்னகா் அருகே கண்டறியப்பட்ட கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை