“செய்யாத குற்றத்துக்காக பேராசிரியர் கலையரசனை கைது செய்தது ஏன்?” - அரசியல் கட்சித் தலைவர்கள் சரமாரி கேள்வி

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
“செய்யாத குற்றத்துக்காக பேராசிரியர் கலையரசனை கைது செய்தது ஏன்?” - அரசியல் கட்சித் தலைவர்கள் சரமாரி கேள்வி

பேராசிரியர் கலையரசன் (இடது) மு.க.ஸ்டாலின், டிடிவிதினகரன், பெ.சண்முகம் (மேலிருந்து கீழ்) சென்னை: பேராசிரியர் கலையரசன் மீதான கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னையில் அமைந்துள்ள ‘சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தில் (MIDS) பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஏ.கலையரசன் நேற்று அதிகாலை 5 மணிக்கு சீருடை இல்லாத காவல்துறையினரால் நிர்ப்பந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு, அவரது செல்போன் பறிக்கப்பட்டு சில மணி நேர அலைக்கழிப்பிற்கு பிறகு மீண்டும் வீட்டில் இறக்கிவிடப் பட்டிருக்கிறார். இது குறித்து காவல்துறையில் புகார் அளித்த பேராசிரியர் கலையரசன், ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கில், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் குறித்து அவதூறாக பதிவிடப்பட்டிருந்ததாகவும் அதில் அவரது புகைப்படம் இருந்ததாகவும் அதனால் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாகக் கூறியுள்ளார். இந்நிலையில், பொய்க் குற்றச்சாட்டின் பேரில் பேராசிரியர் கலையரசன் கைது செய்யப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அவை பின்வருமாறு: ‘உச்சகட்ட பாசிசம்’ - மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியராக உள்ள முனைவர் கலையரசனை சீருடை அணியாத காவலர்கள் சட்டவிரோதமாகக் கைது செய்து, வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். கைது செய்யப்பட்டவர் சாதாரண நபரோ, குற்றப் பின்னணி கொண்டவரோ இல்லை. கலையரசன் தமிழ்நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர். இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான JNU-வில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பதிப்பித்த "The Dravidian Model" நூலின் ஆசிரியர்களில் ஒருவர். ஒன்றிய அரசின் திட்டக்குழுவில் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயார் செய்வதில் பங்களித்தவர். எல்லாவற்றுக்கும் மேல், தமிழ்நாடு முதல்வர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இப்போதும் இருப்பவர். அப்படிப்பட்டவரைத் தெரியாமல் கைது செய்துவிட்டோம் என்று கூறுவது நம்பும்படி இல்லை. செய்யாத குற்றத்திற்காக, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து, அவரது செல்போனைப் பறித்து, கைது செய்து அலைக்கழித்ததைச் சாதாரணச் செயலாக எவரும் கடந்துபோக முடியாது. குற்றவாளிகளை எல்லாம் கூத்தடிக்க விட்டுவிட்டு, கல்வியாளர்களை அச்சுறுத்திப் பார்ப்பது எவ்வளவு பெரிய அசிங்கம்? கல்வியாளர்களைக் கைது செய்து மிரட்டும் அளவுக்கு அறிவின் மீது ஒவ்வாமை கொண்டவர்களாக இவர்கள் நடந்து கொள்வார்கள் என நிச்சயமாக நினைக்கவில்லை. பாசிசத்தில் பாஜகவையும் மிஞ்சிவிடுவார்கள் என்பதைத்தான் இந்தக் கைது காட்டுகிறது. முதல்வரின் ஒப்புதலோடும் உயரதிகாரிகளின் அனுமதியோடும்தான் இந்த அத்துமீறல் நடக்கிறதா? கலையரசன் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. புகழ்பெற்ற பேராசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டைப் புனைந்து, அவரை அலைக்கழித்து, துன்புறுத்திய தவெக அரசின் பாசிச செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு காவல்துறையும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வரும் முனைவர் கலையரசனிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.” எனக் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். ‘அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம்’ - டிடிவி தினகரன் “அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்துப் பேசுவது தேச விரோதமா?. ஜனநாயகக் குரல்களை ஒடுக்கத் துடிக்கும் தவெக அரசின் அடக்குமுறையும், அதிகார துஷ்பிரயோகமுமே இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதும்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து ஆதாரப்பூர்வமாகப் பேசிய சென்னை வளர்ச்சி மையத்தின் பேராசிரியரும், பொருளாதார நிபுணருமான கலையரசனை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று அலைக்களித்த காவல்துறையின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. வழக்குப்பதிவு செய்யாமல், சம்மன் அனுப்பாமல், அதிகாலை 5 மணியளவில் சீருடைகூட அணியாத காவலர்களை வீட்டிற்குள் அனுப்பி அவரை விசாரணை எனும் பெயரில் அவரை மனதளவில் துன்புறுத்தியிருப்பது எந்த வகையில் நியாயம்? பேராசிரியர் கலையரசன் என்ன தீவிரவாதியா? அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்துப் பேசியது தேசவிரோதமா? மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுவதைப் பார்த்து, எங்கு தனது போலி பிம்பம் உடைந்து விடுமோ என்ற பதற்றத்தில் முதல்வர் விஜய் இத்தகைய அடக்குமுறையைக் கையாளுகிறாரா? ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும், அரசின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்பதும் ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமையாக உள்ள நிலையில், மக்களின் பிரச்சினைகளைப் பேசுபவர்களைக் கைது செய்வதன் மூலமாகவோ, விமர்சனக் குரல்களை ஒடுக்குவதன் மூலமாகவோ ஓர் அரசு தனது தோல்விகளை மறைத்துவிட முடியாது என்பதை முதல்வர் விஜய் உணர வேண்டும். ஜனநாயகக் குரல்களை அடக்கி ஒடுக்க நினைக்கும் தவெக அரசின் அடக்குமுறையும், அதிகார துஷ்பிரயோகமுமே இந்த ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதோடு, மக்களின் குரல்களை ஒடுக்க நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு ஜனநாயகத்தின் வழியாகவே மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தினகரன் கூறியுள்ளார். அச்சுறுத்தும் உள்நோக்கத்தோடு நடவடிக்கை: சிபிஎம் “பேராசிரியர் கலையரசன் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களோடு தொடர்புடையவர். இந்தியாவின் திட்டக்குழுவின் உறுப்பினராக இருந்திருக்கிறார். தமிழ்நாடு திட்டக்குழுவின் சில உபகுழுக்களிலும் பணியாற்றியிருக்கிறார். பொருளாதார நிபுணர். அப்படிப்பட்ட ஒருவரை கைது செய்த முறை, காரணம், கைது செய்த நேரம், காவல்துறை நடந்து கொண்ட விதம் இவையனைத்தும் குறிப்பிட்ட இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு பதிவை முன்வைத்து அச்சுறுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு செய்யப்பட்டதாகவே தெரிகிறது. தனக்கு இன்ஸ்டாகிராம் ஐடி எதுவும் இல்லை என்றும் தனது புகைப்படத்தை யாரோ தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆயினும், காவல்துறை இவற்றுக்கெல்லாம் செவி சாய்க்கவில்லை என்பது ஏதோ ஒரு நோக்கத்திற்காக அவரை அச்சுறுத்த வேண்டுமென்பதற்காகவே காவல்துறை இப்படி நடந்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியும். எனவே, தமிழ்நாடு அரசு அந்த குறிப்பிட்ட வலைத்தள கணக்கை தொடங்கியவர் யார்? பதிவிட்டது யார்? புகார் அளித்தது யார்? காவல்துறையினர் உரிய விசாரணையையும், வழிமுறைகளையும் பின்பற்றாமல் துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டது ஏன்? அவர்களுக்கு இந்த உத்தரவை அளித்தது யார்? என்பது குறித்து உரிய முறையில் விசாரித்து தவறிழைத்த அனைவர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்ம்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை