சிஎஸ்கேவைத் தொடர்ந்து... முழுமையாக கலைக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர்கள் குழு!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சிஎஸ்கேவைத் தொடர்ந்து... முழுமையாக கலைக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர்கள் குழு!

சென்னை சூப்பர் கிங்ஸைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவும் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவும் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடந்த சில சீசன்களாக மிகவும் சராசரியாக விளையாடி வருகின்றன. அடுத்தாண்டு ஐபிஎல் சீசனுக்கான ஏலம் தொடங்குவதற்கு முன்பாக அணி நிர்வாகங்கள் அனைத்தும் அணியில் தங்களுக்குத் தேவையான மாற்றங்களை செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டீஃபன் பிளெமிங் விலகினார். அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டார். அதன் பின், சிஎஸ்கேவின் பயிற்சியாளர்கள் குழுவில் இடம்பெற்ற மற்ற பயிற்சியாளர்களும் அவர்களது பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர். Mumbai Indians today announced that Lasith Malinga, Paras Mhambrey and Carl Hopkinson will be moving on from their respective roles in the menâs team coaching setup, thanking each of them for their commitment, contribution and service to the franchise.Their commitment, the⦠pic.twitter.com/p9KSoPTJMT இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவும் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மஹேலா ஜெயவர்த்தனே அந்த பொறுப்பிலிருந்து விலகிய நிலையில், அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கைரன் பொல்லார்டு நியமிக்கப்பட்டார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்களான லாசித் மலிங்கா மற்றும் பராஸ் மாம்ப்ரே அவர்களது பயிற்சியாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஃபீல்டிங் பயிற்சியாளரான கார்ல் ஹாப்கின்சனும் அவரது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவிலிருந்து லாசித் மலிங்கா, பராஸ் மாம்ப்ரே மற்றும் கார்ல் ஹாப்கின்சன் விலகுகின்றனர். இத்தனை சீசன்களாக அவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் வளர்ச்சிக்காக மிக முக்கியப் பங்காற்றியுள்ளனர். அவர்களது சிறப்பான பங்களிப்புக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை