சிங்கப்பூர் புறப்பட்ட கப்பல் ஆந்திராவில் கரை ஒதுங்கியது ஏன்? கப்பலின் பின்னணி

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
சிங்கப்பூர் புறப்பட்ட கப்பல் ஆந்திராவில் கரை ஒதுங்கியது ஏன்? கப்பலின் பின்னணி

அந்தர்வேதி கடற்கரைக்கு சிறிது தூரத்தில் நங்கூரமிட்ட நிலையில் ஒரு பெரிய கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. கடற்கரையிலிருந்து வலதுபுறமாகச் சுமார் ஒரு கிலோமீட்டர் சென்றால், கடலுக்கு அருகே அந்தக் கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். அந்தப் பகுதியில் பொதுமக்கள் நுழைவதற்கு காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர். ஆனாலும், கப்பலைப் பார்ப்பதற்காகப் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருவதால், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அங்கு பணியில் உள்ள காவலர்கள் திணறி வருகின்றனர். அந்தர்வேதி கடற்கரைக்கு அருகே கப்பல் ஒன்று கரை ஒதுங்கியது தொடர்பான காணொளிகள் கடந்த இரண்டு நாட்களாகச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து, அந்தர்வேதி மற்றும் சாகினெட்டிப்பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இருசக்கர வாகனங்கள், கார்கள் மூலம் அங்கு குவிந்து வருகின்றன. அந்தக் கப்பல் அங்கு ஏன் வந்து சேர்ந்தது என்பது குறித்த விவரங்களை இந்திய கடலோரக் காவல்படையும் ஆந்திரப் பிரதேச அரசும் வெளியிட்டுள்ளன. அக்டோபர் 27ஆம் தேதி இரவுக்கும் அக்டோபர் 28 ஆம் தேதி காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில், அர்னாப் புயல் ஏனாம்-நரசாபுரம் அருகே கடற்கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. அந்தச் சமயத்தில் மணிக்கு 125 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. End of அதிகம் படிக்கப்பட்டது புயலின் போது விசாகப்பட்டினத்திலிருந்து சிங்கப்பூருக்கு ஒரு வர்த்தகக் கப்பல் புறப்பட்டது. மார்ஷல் தீவுகளைச் சேர்ந்த அந்தக் கப்பலை இந்தியக் கடலோரக் காவல்படை 'சிக்மா பேர்ல்' என்று குறிப்பிட்டுள்ளது. அர்னாப் புயலின் போது விசாகப்பட்டினத்திலிருந்து சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த கப்பல், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடலில் சிக்கிக்கொண்டது. இதையடுத்து, அந்தர்வேதி கடற்கரைக்கு அருகே, கரையிலிருந்து சில மீட்டர் தொலைவில் கப்பல் நின்றுவிட்டது. புதன்கிழமை அந்தர்வேதி கடற்கரைக்கு ஒரு கப்பல் வந்ததை கவனித்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். "இதற்கு முன்பு அந்தர்வேதியில் ஒரு கப்பல் வந்து நிற்பதை நாங்கள் பார்த்ததில்லை. நாங்கள் மீன்பிடிக்க படகில் கடலுக்குச் செல்லும்போது, ​​கப்பல்களைப் பார்ப்பதுண்டு," என்று சாகினெட்டிப்பள்ளி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அசபாபு பிபிசியிடம் கூறினார். அந்தர்வேதி கடற்கரைக்கு அருகில் வந்த கப்பலை இந்திய கடலோரக் காவல்படை ஒரு 'வணிகக் கப்பல்' என குறிப்பிட்டுள்ளது. அதாவது, அது சரக்குகளை ஏற்றிச் செல்லும் ஒரு கப்பலாகும். வியாழக்கிழமை கப்பலில் இருந்த 20 பணியாளர்களும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டதாக இந்திய கடலோரக் காவல்படை அறிவித்தது. பிபிசி செய்தியாளர்கள் அங்கு சென்றபோது, ​​இந்திய கடலோரக் காவல்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில் இரண்டு ஹெலிகாப்டர்களில் மீட்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கப்பலில் இருந்த பணியாளர்கள் அனைவரும் 'சுஜய்' என்ற இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பல் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புப் பணிகள் தொடர்பான காணொளி ஒன்றையும் இந்தியக் கடலோரக் காவல்படை, எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு அந்தக் கப்பலில் சரக்குகள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து இந்தியக் கடலோரக் காவல்படையோ ஆந்திரப் பிரதேச அரசோ எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இந்தக் கப்பல் விசாகப்பட்டினத்திலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் ஆந்திரப் பிரதேச அரசு வெளியிட்ட தகவல்களின்படி, இந்தக் கப்பல் பயோனியர் மரைன் நிறுவனத்துக்குச் சொந்தமானது. கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்க முதலீட்டு நிதியத்தின் உதவியுடன் 2013ஆம் ஆண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது என்று அதன் நிறுவன விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் 6.26 லட்சம் டன் சரக்குகளைக் கையாளும் திறன் கொண்ட 14 பெரிய கப்பல்களை இந்நிறுவனம் இயக்கி வருகிறது. விவசாயப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், கனிமங்கள், உலோகங்கள் ஆகியவற்றை இக்கப்பல்கள் கொண்டு செல்கின்றன. தற்போது அந்தர்வேதியில் நிற்கும் இந்தக் கப்பல் 179.9 மீட்டர் நீளமும் 28.4 மீட்டர் அகலமும் கொண்டது என்று ஆந்திரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கப்பலின் தாங்கும் திறன் 32,688 டன் என்றும், அதன் மொத்த எடை 20,809 டன் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல் 2010ஆம் ஆண்டு கட்டப்பட்டது. எனினும், இந்தக் கப்பல் எப்போது மீண்டும் புறப்படும் என்பது குறித்து அந்த நிறுவனமோ ஆந்திரப் பிரதேச அரசோ அதிகாரப்பூர்வத் தகவலை வெளியிடவில்லை. "நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகளுடன் நாங்கள் பேசி வருகிறோம். பழுதுபார்க்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும். கப்பல் மீண்டும் எப்போது புறப்படும் என்பது குறித்து இதுவரை எங்களுக்குத் தகவல் கிடைக்கவில்லை. அரசுத் தரப்பில் தேவையான உதவிகளை வழங்குவோம்," என்று ஆந்திரப் பிரதேச அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை