சின்ன வெங்காயம் கிலோ ரூ.150 ஆக உயர்வு @ ஓசூர்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Business ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
சின்ன வெங்காயம் கிலோ ரூ.150 ஆக உயர்வு @ ஓசூர்

கிருஷ்ணகிரி: ஓசூர் பகுதியில் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கிலோ ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பரவலாகச் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர். இதேபோல், தமிழகத்தின் மாநில எல்லைப் பகுதிகளான அத்திப்பள்ளி, ஆனேக்கல் ஆகிய பகுதிகளிலும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் விளைந்து அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் உள்ளூர் மற்றும் வெளியூர் சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். ஓசூர் பகுதியில் விளைச்சல் பாதிக்கப்படும்போது, கர்நாடக மாநிலத்தில் விளையும் சின்ன வெங்காயம் விற்பனைக்குக் கொண்டுவரப்படுவது வழக்கம். கடந்த மாதம் ஓசூர் பகுதியில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாகப் பெய்து வரும் தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்துள்ளது. இதனால், ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.140 முதல் ரூ.150 வரை உயர்ந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: ஓசூரில் தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.150-க்கும், பூண்டு ரூ.280 முதல் ரூ.360 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் எங்களால் இவற்றைச் சமையலுக்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு வெளிமாநிலங்களில் இருந்து சின்ன வெங்காயத்தைக் கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியது: தொடர் மழையால் தமிழகத்தில் மட்டுமின்றி, கர்நாடக மாநிலத்திலும் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்து, விலை உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதம் புதிய விளைச்சல் வந்த பின்னரே சின்ன வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது. அதுவரை விலை குறைய வாய்ப்பில்லை, என்றனர்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை