சிந்தையில் தெய்வீகம்... செயலில் தேசியம்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சிந்தையில் தெய்வீகம்... செயலில் தேசியம்!

சென்னை மாகாண கூட்டுச் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது. பசும்பொன் தேவர் பேசுகிறார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சென்னை மாகாண கூட்டுச் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது. பசும்பொன் தேவர் பேசுகிறார். ஆன்மிகம், அரசியல், அரசியல்வாதிகள் மீதான விமர்சனம் என சொற்கோவைகள் அவையில் சிதறி விழுகின்றன. அவையில் அந்நேரம் மன்ற உறுப்பினர் ஒருவர் எழுந்து நின்று ஒரு வினாவை எழுப்புகிறார். அதில் சிறிது கிண்டலும் தொனிக்கிறது! மதிப்புமிகு உறுப்பினர் தேவர் ஐயாவின் பேச்சைக் கேட்கும் போது, ஒரு பார்வைக்கு காங்கிரஸ்காரரைப் போல் தெரிகிறது. இன்னொரு பார்வைக்கு ஃபார்வர்டு பிளாக் இயக்கம்போல் தெரிகிறது. அவர் எதைச் சார்ந்தவர் என்று தெரியவில்லையே! எனக் குறுக்கிட்டுக் கேட்கிறார். அப்போது தேவர் சொன்ன ஓர் அபூர்வமான பதில்: தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே! நான் காங்கிரஸ்காரனுமல்ல. ஃபார்வர்டு பிளாக் கட்சிக்காரனுமல்ல; நான் ராமகிருஷ்ண இயக்கத்தைச் சார்ந்தவன் என்பதாகும். அவர் பசும்பொன் என்ற பெயர் கொண்ட சிறிய கிராமத்தில் பிறந்தவர். 35 கிராமங்களுக்குச் சொந்தக்காரரான ஒரு செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தது 30.10.1908-இல்; மறைந்தது 30.10.1963-இல்; வாழ்ந்தது 55 ஆண்டுகளே! பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது 35 ஆண்டுகள். அதில் கொடிய வெஞ்சிறையில் வாடியது சுமார் 11 ஆண்டுகள். இத்தகைய தியாக வாழ்வின் திருஉருவம் தான் பசும்பொன் தேவர். பசும்பொன் தேவரின் இறை நம்பிக்கை எல்லையற்றது. முருகன் முடிவு எடுக்கிறான்; அடியேன் செயல்படுகிறேன் என்பார். எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை என்றால், அதுவும் இறைவன் செயலே என்பார்; அவர் ஒரு மாமுனிவர்! நீண்ட நேரம் அல்ல. நீண்ட நாள்கள் தியானத்திலேயே இருப்பார். தியான முடிவுக்குப் பிறகு அவர் சொல்வது பலிக்கும் என்பர் மக்கள். என் தலைவன் நேதாஜி மரணிக்கவில்லை! மீண்டும் வருவார். தேசத்தைக் காப்பார் என்று இறுதிவரை சொல்லிவந்தார். அது தேவரின் உள்ளுணர்வு அடிப்படையிலானது; அது விவாதத்துக்கு அப்பாற்பட்டது என்று எனக்கு விளக்கிய பெருமகன் 102 வயது வரை வாழ்ந்து மறைந்த அமரர் கு. ராஜவேலு. 1952 பொதுத் தேர்தல் நேரம். எங்கள் ஊரான ஏழாயிரம் பண்ணையில் பி.கே. ராஜா என்பவரின் அழகிய பங்களாவின் சிறிய அறையில், தேவர் தங்கியிருந்தார். நான் ஒருவன் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டேன். உற்றுப் பார்த்தால் தேவர் தியானத்தில் இருந்தார். கண் திறந்து என்னைப் பார்த்த அவர் நன்கு படிப்பாய்! நல்ல பெயர் எடுப்பாய்! அடியேன் ஆசீர்வாதம் - இவையே அவர் எனக்குச் சொன்ன வாசகம். வெளியில் வந்து கண்கலங்கி நின்றேன் நான்! மற்றவர் மனம் பார்த்துப் பேசும் குணம் அவரிடம் இல்லை. தனக்குச் சரி எனப்பட்டதை உரக்கப் பேசினார்: அதனால் எழும் சர்ச்சைகளைப் புறந்தள்ளினார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வே நிரம்பி வழிந்த நேரம். அதுசமயம் மூதறிஞர் ராஜாஜியை மாட்டு வண்டியிலும் சிறிய காரிலும் அமர்த்தி மாவட்டம் முழுவதும் பேச வைத்தவர் தேவர். அதே ராஜாஜியின் "வியாசர் விருந்து' நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று, வியாசபாரத நூலையும், அதன் ஆசிரியர் ராஜாஜியையும் புகழ்ந்து பேருரையாற்றியதும் தேவரே! மூதறிஞர் ராஜாஜி முதல்வர் பொறுப்பு ஏற்ற பிறகு, புதிய கல்வித் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தார். அதன்படி, குழந்தைகள் காலை அல்லது மதிய வகுப்பு கல்வி கற்பர். பள்ளிக்குச் செல்லாத காலையிலோ மதியமோ குடும்பத் தொழிலை பயில்வர். இதன்மூலம் இருக்கும் பள்ளிக் கட்டமைப்பில் இரட்டிப்பு எண்ணிக்கை மாணவர்களுக்குக் கல்வி வழங்க முடியும் என்று மூதறிஞர் ராஜாஜி திட்டமிட்டார். இந்தத் திட்டத்தால் பிற்பட்ட சமுதாய மக்கள், குறிப்பாக ஆதி திராவிட இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனக் கருதினார் தேவர். ஆகவே, அப்பன் தொழிலை அவன் மகன் செய்ய வேண்டும். அதற்கு இளமையில் பயிற்சி பெற வேண்டும் என்பது பத்தாம் பசலிக் கொள்கை. இந்தத் திட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் மக்களே உங்களைத் திரும்பப் பெறச் செய்வார்கள் என்று சட்டப்பேரவையில் (26.03.1954) முழங்கினார். ராஜாஜி தன் நண்பராயிற்றே என்று பார்க்கவில்லை. எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற லட்சியமே அவர் கண்முன் நின்றது. 1936-இல் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் காமராஜர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். எதிர் அணியினர் காமராஜரை கடத்திச் சென்று, மறைத்து வைத்திருந்தனர். முத்துசாமி ஆசாரி மூலம் செய்தி அறிந்த தேவர் விருதுநகருக்கு விரைந்தார். அங்கே தேசபந்து மைதானத்தில் தேவர் பேசுகிறார். காமராஜர் காங்கிரஸின் உண்மையான தொண்டர். அவருக்குப் பின்னால் காங்கிரஸ் பேரியக்கமும். ஆயிரக்கணக்கான தொண்டர்களும் உள்ளார்கள். எந்தத் தியாகத்துக்கும் தயாரான அடியேனும் இருக்கிறேன். இங்கே நான் ஒரு மணி நேரம் பேசுவேன். அதற்குள் காமராஜர் மேடைக்கு வந்து சேரவேண்டும். இல்லையென்றால், அவரை மறைத்து வைத்திருப்பவர்கள் வீதியில் நடமாட முடியாது. அதற்குப் பின்னால் நடக்கும் நிகழ்வுகளுக்கு அடியேன் பொறுப்பேற்க முடியாது என்றார். கூட்டம் முடியும் முன்பே காமராஜர் மேடைக்கு வந்து காட்சி தந்தார். இப்படி தூய தொண்டர் காமராஜருக்கு துணை நின்று காப்பாற்றிய கை தேவரின் கை. மகாத்மா காந்தியின் நிர்மாணத் திட்டங்களில் ஒன்றான, ஹரிஜன ஆலயப் பிரவேச நிகழ்வை மதுரையில் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. முன்நின்று நடத்தும் பொறுப்பேற்றவர் மதுரை வைத்தியநாத ஐயர். ஆலயப் பிரவேசத்திற்கு குறிக்கப்பட்ட நாள் 08.07.1939. எல்லாத் திசைகளிலிருந்தும் எதிர்ப்பு; என்ன நடக்குமோ என்ற பயம்; செய்தி எட்டுகிறது முதல்வர் ராஜாஜிக்கு. அவரது அறிவுரைப்படி, தேவரின் உதவியை நாடுகிறார் தியாகி வைத்தியநாத ஐயர். மதுரை எட்வர்டு ஹாலில் பேசுகிறார் பசும்பொன் தேவர், என் அன்பு சகோதரர்களான ஹரிஜனங்கள் அன்னை மீனாட்சி கோயிலில், ஆலயப் பிரவேசம் செய்கிறார்கள். அவர்கள் அன்னையை வணங்கி விட்டு, வீடு சேரும்வரை அவர்களுக்கு முழு பாதுகாப்பும் அனைவரும் தர வேண்டும். அவர்களது முழுப் பாதுகாப்புக்கு அடியேன் உத்தரவாதம் தருகிறேன் என முழங்கினார். தேவரின் உறுதிமொழி நான்கு திசைகளிலும் எதிரொலித்தது. ஆலயப் பிரவேசம் அமைதியாக நடைபெற்றது. இந்தச் செய்தி அறிந்தவுடன் மகாத்மா காந்தி மனமகிழ்ந்து 'மதுரை மிராக்கிள்' என்று வியந்து வர்ணித்தார். இவ்வாறு மகாத்மாவின் லட்சியத்தை நிறைவேற்ற துணை நின்றவரும் தேவர் பெருமகனே! முதுகுளத்தூரில் மூண்ட கலவரத்தால் ஏற்பட்ட இழப்புக்கள் ஏராளம். பொன் மனத் தேவரின் மனம் புண்பட்டது; துயரம் கலந்த தொனியில் தேவர் பேசுகிறார். ஆதி திராவிடச் சகோதரர்களைத் தாக்குபவன் என் இதயத்தை அறுத்து என் உதிரத்தைக் குடிப்பவனே! சண்டையை நிறுத்துங்கள், என்றும்போல் சகோதரர்களாக வாழுங்கள் என்றார். மெதுவாக மீண்டும் அமைதி திரும்பியது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றப் பரம்பரை சட்ட எதிர்ப்பு, அதன் தொடர்பான விரல் ரேகை ஒழிப்பு போராட்டம். இதுதான் தென் தமிழ்நாட்டின் கள்ளர்}மறவர் மக்களின் மானம் காக்கும் போராட்டம். இதை டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு, ப. ஜீவானந்தம், செல்லபாண்டியன் ஆகியோருடன் இணைந்து நடத்தி வெற்றி பெற்றவர் தேவர். இதேபோன்று, ஜமீன் ஒழிப்புப் போராட்டம், ஆலைத் தொழிலாளர்கள் உரிமைப் போராட்டம், இரண்டாம் உலகப் போரில் இந்தியா சேர்க்கப்படுவதை எதிர்த்துப் போராட்டம், இந்திய விடுதலைப் போராட்டம் என்று அவர் பங்கேற்று நடத்திய போராட்டங்கள் பல. 1933-ல் தனது 25-ஆவது வயதில் சாயல் குடி விவேகானந்தர் வாசக சாலை முதலாம் ஆண்டு விழாவில்தான் அவரது முதலாவது உரை. அது ஆன்மிகம் மற்றும் விவேகானந்தர் பற்றியது. 25 வயதுக்குள் எங்கே பெற்றார் இவ்வளவு அறிவாற்றலை! 1955-இல் தேவர் பர்மா சென்று மகான் புத்தரையும் புத்தமதக் கோட்பாடுகளையும் விளக்கி ஆங்கிலத்தில் ஆற்றிய உரை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவ்வுரை கேட்ட புத்தமதத் தலைவர் ஊச்சாண்டேன் "எனக்கே விளங்காத புத்தபிரான் தத்துவங்களை எனக்கே புரிய வைத்த இவரே என் குருநாதர்" எனப் புகழ்ந்தார். அடுத்து இரங்கூன் நகரில் புத்த பிட்சுகளுக்கு மட்டுமே ஒரு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும். அதன்படி, பெண் புத்த பிட்சுகள் வரிசையாக இருபுறமும் படுத்துத் தங்கள் கூந்தலை முன்னே விரித்துக் கொள்வார்கள். வரும் புத்த பிட்சு அந்தக் கூந்தல் விரிப்பின் மீது நடந்து மேடைக்கு வர வேண்டும். அந்த வரவேற்பை ஏற்க மறுத்த தேவர் "மகளிரை நான் பராசக்தி வடிவமாகப் பார்க்கிறேன். அவர்களை வணங்குபவன் நான். ஆகவே, இத்தகைய வரவேற்பை ஏற்கமாட்டேன்" என மறுத்தார். முதுகுளத்தூர் கலவர வழக்கில் அவருக்கு எதிராக வாதிட்ட அப்போது வழக்குரைஞராக இருந்த நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் பணி ஓய்வுக்குப் பிறகு தேவர் பிறந்த தின விழாவில் பங்கேற்று "நான் கண்ட மகாத்மா" எனப் புகழ்ந்துரைத்தார். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தேவரைப் பற்றி "தேவர் உருவில் முருகனைக் கண்டேன் - கந்தனைக் கண்டேன். மனிதனும் தெய்வமாகலாம் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் அவர்" என்றார். வீரத் துறவி விவேகானந்தரால் எப்படி தேசபக்தியை விட முடியவில்லையோ, அப்படியே தேவரால் தேசபக்தியை, தேசத்துக்கான நெடிய போராட்டத்தை விட்டு விலக முடியவில்லை! சிந்தையில் தெய்வீகத்தையும், செயலில் தேசியத்தையும் தாங்கி வாழ்ந்து மறைந்தவர் பசும்பொன் தேவர்! பசும்பொன் தேவர் ஜெயந்தி காந்திய சிந்தனையாளர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை