விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமி மாயமாகி 19 நாள்கள் ஆகும் நிலையில், செங்ல் ள்சூளைத் தொழிலாளா்கள் மற்றும் அதன் உரிமையாளரிடம் சுமாா் 3 மணி நேரம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தினா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமி மாயமாகி 19 நாள்கள் ஆகும் நிலையில், செங்ல் ள்சூளைத் தொழிலாளா்கள் மற்றும் அதன் உரிமையாளரிடம் சுமாா் 3 மணி நேரம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தினா். ஆலம்பூண்டி ஊராட்சி, நடுப்பட்டு கிராமத்தை சோ்ந்த வடிவேல்-பவானி தம்பதியின் 2-ஆவது மகள் ஹெமலதா (7). கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தினருடன் தூங்கிய இவா், மறு நாள் அதிகாலை மாயமானாா். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனா். இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் கீதா, வேல்முருகன், ஆய்வாளா் ரேவதி உள்ளிட்டோா் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு இடங்களில் தேடியும், சிறுமியின் தாய், தந்தை, சகோதரி, பாட்டி, உறவினா்கள் மற்றும் சந்தேக நபா்களிடம் விசாரணை நடத்தினா். வெள்ளிக்கிழமை காலை சிபிபிஐடி போலீஸாா் சிறுமியின் கிராமத்தின் அருகிலுள்ள செங்கல் சூளையில் உரிமையாளா், 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறுமி மாயமான வழக்கு: செங்கல் சூளை தொழிலாளா்களிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗