சிதம்பரம் அருகே பரபரப்பு... மனைவியை அடித்துக் கொன்று, யாருக்கும் தெரியாமல் உடலை எரித்த கணவர்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சிதம்பரம் அருகே பரபரப்பு... மனைவியை அடித்துக் கொன்று, யாருக்கும் தெரியாமல் உடலை எரித்த கணவர்!

மனைவியை அடித்துக் கொன்று, யாருக்கும் தெரியாமல் உடலை சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று எரித்த சம்பவம் குறித்து... மனைவியை அடித்துக் கொன்று, யாருக்கும் தெரியாமல் உடலை எரித்த கணவர் - கோப்புப்படம் சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, ஊருக்கே தெரியாமல் அவரது உடலை சுடுகாட்டில் எரித்த கணவரின் செயல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (34). பெயிண்டரான இவருக்கும், சிவகாமி (30) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் சமாதானமாகி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். கணவன்-மனைவி தகராறு இந்தநிலையில், அக்.30-ஆம் தேதி மதியம் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், மனைவி சிவகாமியை கடுமையாகத் தாக்கியதாகவும், இதில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் வீட்டின் உள்ளே ரத்தக்கரை இல்லாமல் அழித்துள்ளார். சுடுகாட்டில் உடல் எரிப்பு இதையடுத்து, அக்கம் பக்கத்தினருக்கோ, கிராம மக்களுக்கோ எந்தத் தகவலும் தெரிவிக்காமல், இரவு வாகனம் ஒன்றை வரவழைத்து சிவகாமியின் உடலைச் சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று எரித்துள்ளதாக தெரிகிறது. கிராம உதவியாளர் புகார் இதற்கிடையே, கிராம மக்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் சுடுகாட்டில் பெண்ணின் உடல் எரிக்கப்படுவதாக கிராம உதவியாளர், வட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வட்டாட்சியர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் டி. ஜெ. சத்திரிய கவின், அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் கவிதா உள்ளிட்ட காவல்துறையினர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணை மனைவி உயிரிழந்தது குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், அவரது உடலை அவசர அவசரமாக எரித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே பகுதியில் விறகு கடை நடத்தி வரும் ரவிச்சந்திரனின் தந்தையும் சேர்ந்து சிவகாமி உடலை எரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களுக்கு நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளார். குடும்பத் தகராறில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மனைவியின் உடலை ரகசியமாக எரித்ததன் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஊருக்கே தெரியாமல் மனைவியின் உடலை சுடுகாட்டில் எரித்த கணவரின் செயல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை