சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சிதம்பரம் நடராஜா் கோயில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்கவில்லை என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவர் தலைமையில் நிர்வாகக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் உள்ளிட்டோர் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதேபோல, அரசாணைக்கு ஆதரவு தெரிவித்தும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் இ.மனோகரன் அடங்கிய அமர்வு, கோயிலின் நிர்வாகத்தை தீட்சிதர்களிடம் ஒப்படைத்து கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்த பிறகு, கோயில் முறையாக நிர்வகிக்கப்படவில்லை எனக்கூறி, நிர்வாகத்தைக் கண்காணிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோரை முறையே தலைவர் மற்றும் துணைத் தலைவராகவும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரனை உறுப்பினராகவும், பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலாளர், இந்துசமய அறநிலையத்துறைச் செயலாளர் ஆகியோரை அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமித்து உத்தரவிட்டுள்ளனர். இந்த நிர்வாகக் குழு, கோயிலுக்குள் பொது தீட்சிதர்கள் மேற்கொண்ட தொடர் கட்டுமானங்களால் புராதன கட்டடங்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால்,கோயிலின் புராதனக் கட்டடங்களுக்கு இடையூறாக அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள தேவையற்ற கட்டடங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு புராதனச் சின்ன ஆணையத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும், ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துகளை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகக் குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சொத்துகளைக் கணக்கெடுத்து மாயமான மதிப்புமிக்க பொருள்களை மீட்கவும், கோயில் சொத்துகளின் வாடகை குத்தகை பாக்கியை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவற்றுக்கு முறையான கணக்கு வழக்குகளை பராமரிப்பதுடன், கோயிலின் வருமானத்தைப் பெருக்க நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். கடந்த 12 ஆண்டுகளாக, கோயிலுக்கு வந்த வருமானம் குறித்த முழு கணக்கை பொது தீட்சிதர்கள் சமர்ப்பிக்கவில்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், கோயிலை பொது தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்காதது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளனர். புராதன கட்டடங்களுக்குச் சேதம் ஏற்படுத்தாமல், கோயில் திருப்பணிகளை மேற்கொண்டு மத சடங்குகள், மரபுகளின்படி குடமுழுக்கு நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விரைவில் கோயிலின் பெருமையை மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நிர்வாகக் குழு மேற்கொள்ளும் என நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நிர்வாகக் குழுவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், அனைத்து அரசுத் துறை அதிகாரிகளும் வழங்க வேண்டும் எனவும் கோயிலின் கனகசபையில் நின்று அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்யவும், தேவாரம், திருவாசகம் பாடவும் சம வாய்ப்பு வழங்குவதை நிர்வாகக் குழு உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை