சிவசனைத் தலைவர் அஜய் போசலே மீதான கொலை முயற்சி வழக்கில் சோட்டா ராஜன் உள்ளிட்ட 5 பேர் விடுதலை பற்றி... சோட்டா ராஜன் - கோப்புப்படம். 2009-ஆம் ஆண்டு சிவசனைத் தலைவர் அஜய் போசலே மீதான கொலை முயற்சி வழக்கில் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் உள்ளிட்ட 5 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது. சோட்டா ராஜனைத் தவிர தொழிலதிபர் சுரேந்திர அகர்வால், ஷாகிப் ஆலம் கான், ராஜேஷ் யாதவ் மற்றும் விஜய் புருஷோத்தம் சால்வி ஆகியோரையும் சிறப்பு நீதிபதி நரேந்திரநாத் பிரதான் வழக்கில் இருந்து விடுவித்தார். கடந்த 2009-ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தின் போது, புணேவின் கொரேகான் பகுதியில் அஜய் போசலே சென்ற வாகனம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலின் போது போசலே காயமின்றித் தப்பிய நிலையில், அவரது காரை ஓட்டிவந்த ஓட்டுநரின் மீது குண்டு பாய்ந்தது. இவ்வழக்கை ஆரம்பத்தில் புணே பண்ட் கார்டன் காவல் துறையினர் விசாரித்து வந்தனர். 2015-ல் சோட்டா ராஜன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பிறகு, அவர் மீதான 71 வழக்குகளில் ஒன்றாக இதுவும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. மகாராஷ்டிர அரசு இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தது. மும்பை பத்திரிகையாளர் ஜே. டே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சோட்டா ராஜன், தற்போது தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மேலும் பல வழக்குகளிலும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சிவசேனைத் தலைவர் மீது கொலை முயற்சி: சோட்டா ராஜன் உள்ளிட்ட 5 பேர் விடுதலை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗