சொந்த புத்தியும் சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சொந்த புத்தியும் சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

தவெக அரசை விமர்சித்து மு.க.ஸ்டாலின் விடியோ வெளியிட்டது குறித்து... திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம் தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்னைகள் நிலவுவதாக தவெக அரசை விமர்சித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடியோ வெளியிட்டுள்ளார். தவெக அரசை விமர்சித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள விடியோவில் பேசியிருப்பதாவது, "தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பின்மை, வரலாறு காணாத விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அக். 31-ல் திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. சினிமாவில் ஹீரோவாக இருந்தவர், நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார் என நினைத்து சில லட்சம் பேர் செய்த தவறு, தற்போது மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களையும் பாதித்துள்ளது. தவெக ஆட்சியமைப்பதற்கு முன்பாக, மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, போதைப்பொருள் குற்றங்கள் என்பதை மட்டும்தான் தவெகவின் அனைத்து கூட்டங்களிலும் விஜய் பேசினார். அதனை வைத்துதான் ஆட்சிக்கும் வந்தார். ஆனால், இப்போது பட்டப்பகலில் முக்கிய சாலைகளில் கொடூரக் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், தனியாக வசிக்கும் முதியோர்களை கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்தல் போன்றவை சர்வ சாதாரணமாக நடக்கிறது. சிறுமிகள் தொடர்ந்து காணாமல்போய் வருகின்றனர். இந்த (தவெக) அரசு மீது குற்றவாளிகளுக்கு கொஞ்சம்கூட பயமில்லை. தங்களுக்கான ஆட்சியாக இந்த ஆட்சியை குற்றவாளிகள் கொண்டாடுகின்றனர். தலைநகர் சென்னையிலேயே அடையாறு, மயிலாப்பூர், தரமணி என மிக முக்கிய இடங்களிலேயே கொலைகள் நடக்கின்றன. ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றவாளிகள், காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வரும் வழியிலேயே அரிவாளால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்படுகின்றனர். நீதிமன்ற வளாக எதிரிலேயே வெட்டி கொலை செய்யப்படுகின்றனர். பல மாவட்டங்களில் இரட்டைக் கொலை நடக்கின்றனர். கொலை செய்துவிட்டு, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுகின்றனர். புழல் சிறையிலேயே கைதிகள் தப்பியோடுகின்றனர். தேனி மாவட்ட சிறையில் ஒரே இரவில் முதன்மை வாயிலைத் திறந்து 17 கைதிகள் சாவகாசமாக தப்பியுள்ளனர். சாலையின் நடுவே கொலை செய்துவிட்டு, எந்தப் பதற்றமுமின்றி பைக், ஆட்டோக்களில் ஏறி குற்றவாளிகள் செல்கின்றனர். இந்தக் காட்சிகளையெல்லாம் முதல்வர் பார்க்கிறாரா இல்லையா என்பதுகூட நமக்குத் தெரியவில்லை. இந்தச் செய்திகள் அவரின் காதுகளுக்குச் செல்கிறதா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில், தமிழ்நாட்டில் இது எதுவுமே நடக்காதது போலத்தான் முதல்வரின் செயல்பாடுகள் உள்ளன. எல்லா கட்சிகளும் அறிக்கை, கண்டனங்கள், போராட்டங்களையும் மேற்கொள்கின்றனர். ஆனால், முதல்வரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சினிமா படப்பிடிப்புகளில் கேரவன்களில் மணிக்கணக்கில் இருப்பதுபோல, யாராலும் அணுக முடியாத அளவுக்கு முதல்வர் இருக்கிறார். காவல்துறைக்கு முதல்வர்தானே பொறுப்பு. அவர் பதில் சொல்ல வேண்டும் அல்லவா? அதிகாரிகளுடன் உரிய ஆய்வுக் கூட்டம் நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் அல்லவா? ஆனால், இது எதுவுமே நடப்பதில்லை. எல்லா துறைகளுக்கும் ஒருசில அமைச்சர்கள்தான் பதில் சொல்கின்றனர். அவையும் பொறுப்பற்ற பதில்களாகத்தான் இருக்கின்றன. ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆனபோதிலும், எல்லாவற்றுக்கும் திமுகதான் காரணம் என சொல்வதுதான் இவர்களிடம் இருக்கும் ஒரே பதில். இதில் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், பாதிக்குப் பாதி குற்றச் சம்பவங்களில் தவெகவினரே சம்பந்தப்பட்டிருக்கின்றனர். சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற முதல்வர் வெளியில் எங்கும் செல்லவேண்டிய தேவையில்லை. தன்னுடைய (தவெக) கட்சியில் இருப்பவர்களைக் கட்டுப்படுத்தினாலே பெருமளவு குற்றங்கள் குறையும். பெண்களை தவெக காப்பாற்ற வேண்டிய நிலை இல்லாமல், தவெகவிடமிருந்து பெண்களைக் காப்பாற்ற வேண்டிய நிலைதான் இருக்கிறது. பொதுவாக எல்லா கட்சிகளிலும் ஒருசில களைகள் இருக்கலாம். ஆனால், களைகளெல்லாம் ஒட்டுமொத்தமாக சேர்ந்திருக்கும் கட்சியாக தவெக விளங்குகிறது. தவெக நிர்வாகி போதைப்பொருள் கடத்தியதாக செய்திகள் வெளியிட்டால் கொன்று விடுவோம் என பத்திரிகையாளர்களை தவெக ஒன்றியச் செயலாளர் மிரட்டுகிறார். இதுதான் தூய சக்தியா? போதைப் பொருள் மூலம் தவெக நிர்வாகி சம்பாதித்த பணம்தான், நாகை மற்றும் பிற மாவட்டங்களிலும் தவெக தேர்தல் செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மட்டுமின்றி, வரலாற்றில் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்ந்து மக்கள் துன்புறுகின்றனர். ரேசன் கடைகளில் சன்னரக அரிசி போடுவதாய்ச் சொல்லி, ரேசன் அரிசிக்கு பாலிஷ் போட்டு ஏமாற்றுகின்றனர். ரேசன் கடைகளில் மலிவு விலை வெங்காயம் விற்பனை என்கின்றனர். ஆனால், ரேசன் கடைக்குச் சென்றால் வெங்காயம் இருப்பு இல்லை என ஏமாற்றுகின்றனர். மக்கள் அன்றாட வாழ்க்கையே இந்த விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறது. தங்கம் வாங்க முடியுமா என்று ஏழைகள் ஏங்கிய காலம் சென்று, அரிசியே வாங்க முடியுமா என்று ஏங்குகின்றனர். திமுக ஆட்சியின்போது, இந்தியாவிலேயே பணவீக்கம் குறைவாக இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. ஆனால், இப்போது இருக்கும் ஆட்சியாளர்களுக்கு எந்தத் துறையிலும் நிர்வாகத் திறன் இல்லை. நிர்வாகம் என்றால் என்ன என்பதே தெரியாத ஒரு மூடர் கூடத்தின் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தவெக அரசு, சொந்த புத்தியும் இல்லாத சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு. இந்தியாவிலேயே எந்த மாநிலமும் வாங்காத அதிக விலையாக ரூ. 37-க்கு மின்சாரம் வாங்குகின்றனர். காரணம், எந்தத் திட்டமிடலும் தொலைநோக்கும் இல்லாததுதான். தற்போது அதிலிருந்து திசைதிருப்புவதற்காக, ரூ. 41-க்கு மின்சாரம் வாங்கவிருப்பதாக செய்தி வெளியிட்டு பின்னர் பின்வாங்கி விட்டனர். ஒரு கோடு பக்கத்தில் இன்னொரு பெரிய கோடு போட்டால், முதல் கோடு சிறியதாகி விடும். அதுபோல, ரூ. 37-ஐ குறைவாகக் காட்ட வேண்டும் என ரூ. 41 நாடகத்தை அரங்கேற்றினர். மக்களைப் பாதிக்கின்ற இந்தப் பிரச்னைகளையெல்லாம் நாம் பேசினால், ஒரு நல்ல அரசு சரிசெய்து கொள்ள வேண்டும். மக்கள் பிரச்னைகளை எந்த கட்சி பேசினாலும், அவர்களின் பதிவுகளில் அவர்களையே தவெகவினர் திட்டுகின்றனர். இரண்டு பேருக்குத்தான் போட்டி என முதல்வர் கூறுகிறார். உண்மையில் மின்வெட்டு - அரிவாள் வெட்டுக்கு இடையில்தான் போட்டி நிலவுகிறது. மின் கட்டணம் - அத்தியாவசிய பொருள் விலை உயர்வு, விலை உயர்வு - கொலை உயர்வு. இதுதான் தமிழ்நாட்டின் யதார்த்தம். அண்ணனாக, மாமாவாக, சித்தப்பா, பெரியப்பாவாக இருப்பேன் என வசனங்கள் பேசினார். முதலில் அவர் முதல்வராக இருக்க வேண்டும். அவர் வேலையை ஒழுங்காகப் பார்த்தால், தமிழ்நாடு எப்படி எல்லா துறைகளிலும் பின்நோக்கிச் செல்லும். ஏதேனும் ஒரு துறையிலாவது கடந்த திமுக ஆட்சியைவிட தவெக ஆட்சியில் சிறப்பாகச் செயல்படுகிறதா? எல்லாவற்றிலும் சரிவு, வீழ்ச்சி, பின்னடைவுதான்" என்று தெரிவித்துள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை