நடிகர் சூர்யாவின் 49ஆவது படத்தை இயக்கவிருக்கும் மதிமாறன் குறித்து... சூர்யா, மதிமாறன் - ENS நடிகர் சூர்யாவின் 49ஆவது படத்தை மண்டாடி படத்தின் இயக்குநர் மதிமாறன் இயக்கவிருப்பதாக தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சீன் என்ற படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் நவ.6ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்துக்குப் பிறகு சூர்யாவின் 49ஆவது படம் எதுவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. வெற்றிமாறன் - சூர்யாவின் வாடிவாசல் படப்பிடிப்புக்கு மேலும் காலாவகாசம் தேவைப்படுவதால், இந்தப் படத்துக்கு முன்பாக சூர்யா வேறு படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மண்டாடி படத்தில் சூரியும் நடிப்பு பாராட்டப்பட்டது. படமும் வெற்றியடைந்தது. இதனால், நடிகர் சூர்யா மதிமாறன் இணைந்து நடிக்கவிருப்பதாகவும் இந்தப் படமும் கடலோரம் சார்ந்ததாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக வெளியான விஸ்வநாதன் & சன்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வசூலில் அசத்தியது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சூர்யா 49 படத்தை இயக்கும் மண்டாடி இயக்குநர் மதிமாறன்?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗