சொத்து விவரம் தாக்கல் செய்ய அரசு ஊழியர்களுக்கு அவகாசம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சொத்து விவரம் தாக்கல் செய்ய அரசு ஊழியர்களுக்கு அவகாசம்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டிருப்பது பற்றி... தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியர்கள் தங்களின் அசையும், அசையா சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவரங்களை ஒருங்கிணைந்த மனிதவள நிதி மேம்பாட்டுத் திட்டத்தின் (ஐஎஃப்ஆர்எம்எஸ்) ‘களஞ்சியம்’ செயலி வாயிலாக, அக்டோபர் 31-க்குள் பதிவு செய்ய வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை தனது கடிதத்தில் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, இத்துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் ‘களஞ்சியம்’ செயலியில் விவரங்களை தவறாமல் பதிவுசெய்து, அதன் விவரத்தை இயக்குநரகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பித்தால் மட்டுமே பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் கருவூலத் துறையின் களஞ்சியம் செயலியில் சர்வர் பிரச்னை போன்ற தொழில்நுட்பக் கோளாறுகளால் ஆவணங்களை பதிவேற்றுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளதால், சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, சொத்து மற்றும் கடன் விவரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை