ஸ்பெயினில் 2 அதிவேக ரயில்கள் மோதிய விபத்தில் 68 பேர் உயிரிழப்பு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
ஸ்பெயினில் 2 அதிவேக ரயில்கள் மோதிய விபத்தில் 68 பேர் உயிரிழப்பு

மாட்ரிட்: ஸ்பெயி​னில் இரண்டு அதிவேக பயணிகள் ரயில்கள் ஒன்​றோடொன்று மோதி ஏற்​பட்ட பயங்​கர விபத்​தில் 68 பேர் உயிரிழந்​துள்​ளனர். 179-க்​கும் மேற்​பட்​டோர் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டுள்​ளனர். அதில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்​கிட​மாக உள்​ள​தால் உயி​ரிழப்பு எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கும் என்று அஞ்​சப்​படு​கிறது. ஸ்பெயி​னின் மத்​திய பகுதி​யில் உள்ள டொலிடோ மாகாணத்​தில் உள்ள உர்டா மற்​றும் லாஸ் யெபனஸ் பகுதி​களுக்கு இடையே ரென்ஃபே மற்​றும் இரியோ ஆகிய இரு வேறு தனியார் மற்​றும் அரசு நிறு​வனங்​களால் இயக்​கப்​படும் அதிவேக ரயில்​கள் ஒரே பாதையில் ஒரே திசையில் பயணித்​தன. அப்​போது, பின்​னால் வந்த ரென்ஃபே ரயில், முன்​னால் சிக்​னலில் நின்​றிருந்த இரியோ ரயி​லின் பின்​பகுதி​யில் அதிவேக​மாக மோதி​யது. இதில், இரண்டு பெட்​டிகள் தடம் புரண்டு பள்​ளத்​தில் சரிந்​தன. சிக்​னல் அமைப்​பில் ஏற்​பட்ட கோளாறைச் சரி செய்​யும் பணி​யில் ஈடு​பட்​டிருந்த ஊழியர் ஒரு​வர் எச்​சரிக்கை செய்​யத் தவறிய​தால் ஏற்​பட்ட மனிதத் தவறே இந்த விபத்​துக்​குக் காரணம் என முதற்கட்ட தகவல்​கள் தெரி​விக்​கின்​றன. இச்​சம்​பவத்​தின் போது ரென்ஃபே ரயி​லில் 397 பயணிகளும், இரியோ ரயி​லில் 147 பயணிகளும் இருந்​தனர். இந்த விபத்​தில் இது​வரை 68-க்​கும் மேற்பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர், 179-க்கும் மேற்பட்டோர் காயமடைந்​துள்​ளனர். மருத்​து​வ​மனை​யில் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த விபத்​தைத் தொடர்ந்து நகரங்​களுக்கு இடையேயான அதிவேக ரயில் சேவை​ நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் இரங்​கல் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்​செஸ், “டொலிடோ மாகாணத்​தில் நடந்த ரயில் விபத்து அதிர்ச்​சி​யளிக்​கிறது. இந்த விபத்​தில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்​களைத் தெரி​வித்​துக் கொள்கிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை