விளையாட்டு வீரர்கள் மேம்பாட்டு உதவித்தொகைத் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் விஜய். நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில் முதல்வர் விஜய். - படம்: TNDIPR விளையாட்டு வீரர்கள் மேம்பாட்டு உதவித்தொகை திட்டத்தை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (அக். 29) தொடங்கி வைத்தார். முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள் இன்று சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 142 தங்கம், 97 வெள்ளி, 80 வெண்கலப் பதக்கங்களோடு முதலிடத்தைப் பிடித்த சென்னை மாவட்டத்திற்கும், 64 தங்கம், 43 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களோடு இரண்டாம் இடத்தைப் பிடித்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், 27 தங்கம், 37 வெள்ளி, 54 வெண்கலப் பதக்கங்களோடு மூன்றாம் இடத்தைப் பிடித்த கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் கோப்பைகளை வழங்கி, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைப் பாராட்டினார். மேலும், ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 6 கோடியே 85 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். தமிழ்நாடு ஒலிம்பிக் நீர்விளையாட்டு அகாதெமி மற்றும் பல்நோக்கு விளையாட்டு வளாகத்தைத் திறந்து வைத்தல் ராமநாதபுரம் மாவட்டம், பிரப்பன்வலசையில் ரூ. 42 கோடியே 90 லட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு ஒலிம்பிக் நீர்விளையாட்டு அகாதெமி மற்றும் சேலம் மாவட்டம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரூ. 20 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு விளையாட்டு வளாகம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார். விளையாட்டு வீரர்கள் மேம்பாட்டு உதவித்தொகைத் திட்டத்தை தொடங்கி வைத்தல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதிகள், சிறப்புநிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளின் தனிப்பட்ட செலவினங்களுக்காக மாதம் ரூ.500-, முதன்மை விளையாட்டு மைய விடுதிகளில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு மாதம் ரூ.1000- என 2,600 வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 1.77 கோடி வழங்கும் விளையாட்டு வீரர்கள் மேம்பாட்டு உதவித்தொகைத் திட்டத்தை முதல்வர் இன்று விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கித் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், தலைமைச் செயலாளர், அரசு உயர் அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், விளையாட்டுத்துறை வல்லுநர்கள், விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
விளையாட்டு வீரர்கள் மேம்பாட்டு உதவித்தொகைத் திட்டம்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗