‘ஸ்டார் 3.0’ திட்டத்தில் புதிய சர்வே எண்கள் விடுபட்டதால் சிக்கல்: புதிய வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அவதி

📅 📍 Salem, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
‘ஸ்டார் 3.0’ திட்டத்தில் புதிய சர்வே எண்கள் விடுபட்டதால் சிக்கல்: புதிய வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அவதி

சேலம்: பத்​திரப்​ப​திவுத் துறை​யில் ‘ஸ்​டார் 3.0’ திட்​டத்​தின் கீழ் இணை​ய​வழி பத்​திரப் ​ப​திவு நடைமுறைக்கு வந்​துள்ள நிலை​யில், தமிழகத்​தின் பல்​வேறு பகுதி​களில் புதிய வீட்​டுமனைகளுக்​கான சர்வே எண்​கள் இணை​ய தளத்​தில் விடு​பட்​டுள்​ள​தால், பத்​திரப்​பதிவு செய்ய முடி​யாமல் பொது​மக்​கள் அவதிப்​பட்டு வரு​கின்​றனர். தமிழகத்​தில் பத்​திரப்​ப​திவுத் துறையை நவீனப்​படுத்​தும் வகை​யில், ‘ஸ்​டார் 2.0’ திட்​டம் 2018-ம் ஆண்டு பிப்​ரவரி​யில் நடைமுறைப்​படுத்​தப்​பட்​டது. தொடர்ந்து, ‘ஸ்​டார் 3.0’ திட்​ட​மாக நவீனப்​படுத்​தப்​பட்டு, கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி முழு​மையாக பயன்​பாட்​டுக்கு வந்​தது. இதன்​மூலம், புதிய அடுக்​குமாடிக் குடி​யிருப்​பு​கள், அங்​கீகரிக்​கப்​பட்ட மனைப்​பி​ரிவு​களின் முதல்​முறை விற்​பனைப் பத்​திரங்​கள், வங்​கிக் கடன் பெறு​வதற்​கான ஆவணங்​கள் உள்​ளிட்​ட​வற்​றைச் சார்-பதிவாளர் அலு​வல​கத்​துக்கு நேரில் செல்​லாமல் இணை​ய​வழி​யில் மட்​டுமே பதிவு செய்​யும் நேரடி வருகை​யில்லா ஆவணப்​ப​திவு முறை அமல்​படுத்​தப்​பட்​டது. இந்​நிலை​யில், ‘ஸ்​டார் 3.0’ திட்​டம் நடைமுறைக்கு வந்த ஆகஸ்ட் 17-ம் தேதிக்​குப் பிறகு, தமிழகத்​தின் பல்​வேறு பகுதி​களில் புதிய வீட்​டுமனைகளுக்​கான சர்வே எண்​கள் பதிவுத்​துறை​யின் tnreginet இணை​யதளத்​தில் இடம்​பெறவில்லை எனப் புகார் எழுந்​துள்​ளது. இத​னால், வீட்​டுமனைகளை வாங்​கிய​வர்​கள் அவற்​றைப் பத்​திரப்​ப​திவு செய்ய முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது. இதற்கு உதா​ரண​மாக, சேலம் மாவட்​டம், தலை​வாசல் வட்​டம், மணி​விழுந்​தான் தெற்கு கிராமத்​தில் மட்​டும் 450-க்​கும் மேற்​பட்ட சர்வே எண்​கள் விடு​பட்​டுள்​ளன. இத​னால், அப்​பகுதி​யில் வீட்​டுமனைகளை விற்​பனை செய்​பவர்​களும், வாங்​கிய​வர்​களும் கடந்த 2 மாதங்​களாக அவற்​றைப் பதிவு செய்ய முடி​யாமல் தவித்து வரு​கின்​றனர். இது​குறித்து வீட்​டுமனை விற்​பனை​யில் ஈடு​பட்​டுள்​ளோர் மற்​றும் மனைகளை வாங்​கியோர் கூறிய​தாவது: பதிவுத்​துறை​யின் tnreginet இணை​யதளத்​தில் புதிய வீட்​டுமனைகளுக்​கான சர்வே எண்​கள் விடு​பட்​டுள்​ள​தால், கடந்த 2 மாதங்​களாக வீட்​டுமனை விற்​பனை பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. வீட்​டுமனைகளை வாங்​கு​வதற்​காக வங்​கிக் கடன் பெற விண்​ணப்​பிக்க முடி​யாத நிலை​யும் ஏற்​பட்​டுள்​ளது. பல மாவட்​டங்​களி​லும் வீட்​டுமனை விற்​பனை பாதிக்​கப்​பட்​டுள்​ள​தால், பத்​திரப்​ப​திவுத் துறைக்​கும் அதன் மூலம் கிடைக்க வேண்​டிய வரு​வாயும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது, என்​றனர். இது​குறித்து பத்​திரப்​ப​திவுத் துறை உயரதி​காரி​களிடம் கேட்​டபோது, ‘ஸ்​டார் 3.0 திட்​டத்​தில் மென்​பொருள் நிறு​வனம், வரு​வாய்த் துறை ஆவணங்​களை மேப்​பிங் செய்​த​போது சில சர்வே எண்​கள் விடு​பட்​ட​தால் இந்​தப் பிரச்​சினை ஏற்​பட்​டுள்​ளது. தமிழகத்​தின் பல்​வேறு பகுதி​களி​லும் இதுபோன்ற பிரச்​சினை எழுந்​துள்​ளது. இது​குறித்து சம்​பந்​தப்​பட்ட மென்​பொருள் நிறு​வனத்​தின் கவனத்​துக்​குக் கொண்டு செல்​லப்​பட்​டுள்​ளது. விரைவில் இப்​பிரச்​சினைக்​குத் தீர்வு காணப்​படும்’ என்​றனர்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை