இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 33 காசுகள் உயர்ந்து ரூ. 94.93 ஆக நிலைபெற்றது. இந்திய ரூபாய் | கோப்புப் படம் மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தையில் நிலவிய சாதகமான போக்கு மற்றும் டாலரின் மதிப்பு குறைந்ததையடுத்து, இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 33 காசுகள் உயர்ந்து ரூ. 94.93 ஆக நிலைபெற்றது. இருப்பினும், உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் பலவீனமான பங்குச் சந்தை ஆகியவை ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்தியது. வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 95.21 ஆக தொடங்கி, பிறகான வர்த்தகத்தில் அதிகபட்சமாக ரூ. 94.94 ஆகவும் குறைந்தபட்சமாக ரூ. 95.28 ஐ தொட்டு, இறுதியாக ரூ. 94.93 என்ற அளவில் நிலைபெற்றது. வர்த்தக முடிவில் அதன் முந்தைய நாள் முடிவை விட 33 காசுகள் உயர்ந்து நிறைவடைந்தது. நேற்று (வியாழக்கிழமை) ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.95.26 ஆக நிறைவடைந்தது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 33 காசுகள் உயர்ந்து ரூ. 94.93 ஆக நிறைவு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗